அல்லாஹ்வின் அன்பு

அகிலத்தையும் படைத்தவனே றப்புல் ஆலமீன்

அன்பு கொண்டு ஆழ்பவனே றப்புல் ஆலமீன்

துன்ப துயரம் போக்க வல்ல தூய நாயனே!

துயர் நீக்கி காக்க வல்ல எங்கள் ரஹ்மானே!

 

உம்மத் உந்தன் வழியை மறந்து தூரப் போகையில்

மனம் அழுது மறை வழியின் மேன்மை காட்டினாய்

மந்தையென அடிமையாக வாழ்ந்த மனிதர்க்கு

தௌராத் வேதம் மூஸா வழி நீயும் கொடுத்தாய்

 

மக்கள் உந்தன் மேன்மை வழி தொடர்ந்து போகையில்

மாறி வந்த சந்ததியோ வழி மாறிப் போயினர்

மேன்மை வாழ்வை இழந்து தடுமாறி நிற்கையில்

ஸபூர் வேதம் தாவூத் வழி நீயும் கொடுத்தாய்

 

கொழுத்துப் போன இருதயங்கள் கொடுமை செய்தது

கொடிய வழியில் இறையை மறந்து பாவம் செய்தது

அரிய வழியை இழந்து உம்மத் அல்லல் படுகையில்

அறைகூவும் இறைதூதர்கள் தொடர்ந்து அனுப்பினாய்

 

இன்ஜீல் வேதம் இறைவன் வகுத்த வழியைச் சொன்னது

ஈஸா மஸீஹின் தியாக வாழ்வு புது வழியைத் திறந்தது

யாரும் காணா அருட்கொடையாம் அல்லாஹ்வின் அன்பையே

அகிலம் காண உன்னைக் கொடுத்தாய் ஈஸா மஸீஹே!

 

One Response to அல்லாஹ்வின் அன்பு

  1. Finch says:

    Yeah Caribou, we are pretty used to you not doing your research. Thats the only exaltnpaion for your questions, your answers and your entire belief system. -2Was this answer helpful?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *