உண்மையின் வெளிச்சத்திற்கு

அன்புள்ள சகோதரன் நூருல் அமீன் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

உங்கள் கடிதம் கண்டு மிகவும் சந்தோஷமடைந்தேன். நானும் என் குடும்பத்தாரும் சந்தோஷமாக, அல்லாஹ்வின் ரஹ்மத்தோடு வாழ்ந்து வருகிறோம். உங்கள் சுகத்துக்காகவும் உங்கள் குடும்பத்தாரின் சுகத்துக்காகவும் அல்லாஹ்விடம் துஆ கேட்கிறேன்.

உங்களின் விடாமுயற்சி எனக்குள் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இறை வேதம் கூறுகிறது:   “சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்”. உங்கள் மீது அல்லாஹ் மட்டில்லாத அன்பு வைத்துள்ளான் என்பதை நான் உணர்கிறேன். இதனால் தான் கடந்த 7 மாதங்களாக எமது உறவு தொடர்ந்து வருகிறது.

சென்றவாரம் பிஜே பற்றிய முஸ்லீம்களின் விமர்சனங்கள் சிலவற்றை படித்தேன். அதில் ஒரு கருத்து என்னை மிகவும் கவர்ந்தது. பிஜேயின் கூட்டத்திலிருந்து பிரிந்து சென்ற ஒருவர் பிஜேயைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்: “பிஜே எங்களோடு கதைத்துக்கொண்டிருக்கின்ற வேளைகளில் அடிக்கடி கூறுவார் ‘நான் அல்லாஹ் என்று ஒருவன் இல்லையென்று வாதாடினாலும் நான் தான் வெற்றிபெறுவேன்.’” நடுநிலை வகித்து இந்த கருத்தை பார்க்கும் பொழுது, பிஜே உண்மையை பேசியிருப்பது தெளிவாகின்றது. உண்மையில் இயற்கையாக விவாத திறமையுள்ளவர்கள் தர்க்கவியலிலும் புலமைப்பெற்றிருந்தால் எந்தவொரு பொய்யையும் மெய்ப்பிப்பது அவர்களுக்கு சர்வசாதாரணம்.

அல் ஹக் (சத்தியம்) என்பது நாவண்மையை சார்ந்திருப்பதல்ல. அதனை யாராலும் அழிக்கமுடியாது. அதனை பாதுகாக்க மனித பலமோ, ஜிஹாதோ தேவையுமில்லை. அல்லாஹ்வை மனிதர்கள் காப்பாற்றுவதற்கவே ஜிஹாத் என்று நினைக்கத்தோன்றுகிறது. ஏனென்றால் நாங்கள் ஹக்கை காப்பாற்றவே ஜிஹாத் செய்கின்றோம் என்று பறைசாட்டுவது அடிக்கடி எங்கள் காதுகளை எட்டுகிறது. இது நகைப்புக்குறிய காரியமாக இருந்தாலும் எனக்குள் மிகவும் கவலையை ஏற்படுத்துகிறது. காரணம் ‘அல்லாஹ்வுக்காக காபிர்களை அழியுங்கள்’ என்ற போதனையில் மயங்கி, எமது இளம் சமுதாயம் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்வது உலகலாவிய ரீதியில் பெருகிக்கொண்டே வருகிறது. இலங்கையில் முஸ்லீம்கள் முஸ்லீம்களை கூட ஜிஹாத் என்ற பெயாpல் கொலைசெய்த சம்பவங்களும் உங்களுக்குத் தெரியாமலிருக்காது. உதாரணமாக பேருவளை சம்பவம், பயில்வான் சம்பவங்களை கூறலாம்.

அல் ஹக் என்றால் இறைவன். இறைவனை அறிந்துக்கொள்ளுதல் என்பது இறைவனைப் பற்றி அறிந்துகொள்வதல்ல. இவ்விரண்டிற்கும் இடையில் பாரிய வேறுபாடுள்ளது. இறைவனைப் பற்றி அல்லது சத்தியத்தைப் பற்றி அறிந்துக்கொள்ள பெற்றோர் கூரிய காரியங்கள், பாடசாலையில் கற்ற காரியங்களை அறிஞர்களின் போதனைகள், இறைவனைப் பற்றி எழுதப்பட்ட புத்தகங்கள் எங்களுக்கு உதவி புரியலாம். இவற்றின் மீது எங்கள் நம்பிக்கை எனும் கட்டிடத்தை கட்டினால் மனலில் கட்டப்பட்ட கட்டிடத்துக்கு ஒப்பாகுவோம்.

இறைவனை அறிந்துகொள்வதென்பது, ஆதம் (அலை) எவ்வாறு இறைவனோடு உறவுவைத்திருந்தாரோ அதேபோன்று இறைவனோடு உறவு வைப்பதாகும். இலகுவாக விளங்கிக்கொள்ள கணவன் மனைவிக்கிடையில் இருக்கும் ஐக்கியத்தை ஒப்பிடலாம்;. அன்பு சகோதரனே, இது ‘இந்தப் பழத்தின் சுவை இப்படிப்பட்டதென்று’ நீங்கள் சாப்பிட்டில்லாத ஒரு பழத்தை குறித்து நான் விளக்கம் கொடுப்பது போன்று தோன்றுகின்றது. இதனால் தான் நீங்கள் எப்பொழுது முஸ்லிமானீர்கள் (இறைவனுக்கு உங்களை அர்ப்பணித்தீர்கள்) என்று கேட்டிருந்தேன். உங்களின் பதில் ‘இறைவனைப் பற்றி சில காhpயங்களை அறிந்துள்ளேன் என்றுதான் இருக்கின்றது. “குலில் ஹக்கு வலவ்கான முர்ரா” “கசப்பாக இருந்தாலும் உண்மையே பேசு”  என்ற பழமொழிக்கினங்க இந்த உண்மையை சொல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளேன். அதாவது நீங்கள் (உண்மை) முஸ்லீம் அல்ல. ஆதம் நபியைப்போன்ற முஸ்லிம் அல்ல. இப்ராஹிம் நபியைப்போன்ற முஸ்லீம் அல்ல. மூஸா நபியைப் போன்ற முஸ்லீம் அல்ல.

ஒருவன் வளர்ப்பில் முஸ்லிமாவான் என்பதை யூசுப் கர்ளாவி போன்ற அறிஞர்களே ஏற்க மறுக்கின்றனர். ஒருவன் பருவவயதை அடைந்தவுடன் தன்னை அர்ப்பனிப்பதற்கூடாகவே ஒருவன் முஸ்லிமாவதாக கூறுகின்றனர். ஆகவே நீங்களும் உண்மை முஸ்லிமாக வேண்டும் எனும் அவாவிலேயே உங்களோடு கடித தொடர்ப்பை ஏற்படுத்தி, என்னால் முடிந்தவரை அல் ஹக்கை குறித்து உங்களுக்கு தெளிவுபடுத்த முற்படுகிறேன். ‘வல்ல நாயன் சத்தியத்தை (தன்னை) வெளிப்படுத்துவானாக’ ஆமீன்.

அன்பு சகோதரனே அல்;லாஹ்வுக்காக எதனையும் செய்ய எம்மால் முடியாது. ஆனால் அவனால் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். உண்மையாக தேடுவோருக்கு ஏக இறைவன் நிச்சயமாக நேர்வழி காட்டுவன். நேர்வழிபெற்ற உண்மை முஸ்லீம் கூட்டத்தில் உங்களையும் சேர்த்துக்கொள்வானாக.

இப்படிக்கு

உங்கள் பதில் கடிதத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் நண்பன்.

இறைநேசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *