ஒரு ஜிஹாதியை ஈஸா அல் மஸீஹ் சந்திக்கிறார்

kamal saleem 

கமல் சலீம்ஓர் சவுல் மீண்டும் நடுரோட்டில் இயேசுவை கண்ட அதிசயம் 
முன்னாள் இஸ்லாமிய தீவிரவாதி 
இன்றைய தீவிர விசுவாசி

1957 ஆம் ஆண்டு லெபனானில் பிறந்த இவர் ஒரு சுன்னி முஸ்லிம் ஆவார். அதோடு சலீம் ஒரு தீவிர யூத விரோதியாவர்.

இன்றோ, கமல் சலீம் அரசியல்வாதிகளுக்கும், ராணுவ தலைவர்களுக்கும், உள்துறை நிபுணர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், சட்ட வல்லுனர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆலயங்கள், வழிபாட்டு தலங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் வரவேற்கும் பண்புடைய முகமதிய மக்களுக்கும் போதித்து வருகிறார்.

4 வயது குழந்தையாய் இருக்கும் போதே இவருடைய தாயார் அமெரிக்கர்களையும், யூதர்களையும் கொன்று குவித்து முகமதிய சமயத்திற்காக உயிர் துறக்கும் தியாகியாக மாற வேண்டும் என்று போதிக்கபட்டார். 7 வயதில் முதற் முயற்சியாக ஆயுதங்களை கடத்தும் குழந்தையாக அப்போதைய பாலஸ்தீன தீவிரவாத தலைவர் யாசர் அராபாத்துக்காக செயல்பட்டார். 15 வயதில் வெடிமருந்துகளில் மன்னனான இவர், லிபிய முன்னாள் அதிகாரியான முகமது கடாபியின் ஆட்சிகாலத்தில் அங்குள்ள பாலைவன தீவிரவாத முகாம்களில் உள்ள தீவிரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்து வந்தார்.

வாலிபனான பொது இவரின் தீவிரவாத மூர்க்கம் அதிகரித்தது. பாரிஸ், லண்டன், ஆப்கானிஸ்தான், செல்வசெளிபுள்ள அரபு ஷேக்குகளிடம் சென்று தீவிரவாத இயக்கங்களுக்கு தேவையான நிதிகளை திரட்டி வந்தார். உலகம் முழுவதும் தீவிரவாத தாக்குதல்கள் நடத்துவதே இதன் அடிப்படை. அதன் பிறகு அமெரிக்கா சென்று அங்குள்ள நலிந்த மக்களை தன்னுடைய திறமையால் முகமதிய மதத்திற்கு மாற்றினார்.

இதன் மத்தியில் ஓர் நாள் கொடுமையா விபத்தொன்றில் சிக்கினார். இவர் இவரின் இயக்கங்களுக்கு பணம் திரட்டிய போதும் தன்னை பற்றியோ, குடும்பத்தை பற்றியோ கவலை பட்டதில்லை. மருத்துவ காபீடோ, குடும்பத்தில் போதிய பணமோ இல்லாததினால் படுத்த படுக்கை ஆனார். இவரை கவனிக்க ஆளில்லாமல் மிகவும் வருத்தப்பட்டார். இவருடன் பிறந்தவர்கள் 13 பேர்.

கிறிஸ்தவர்களின் அன்பு இவரின் மனதை மாற்றியது. இவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் தேவனை அதிகமாக நேசிப்பவர். இவரை காபற்றின கிறிஸ்தவர் கமல் சலீமை தன்னுடைய வீட்டில் தங்க சொன்னார். கமல் சலீம் குணம் அடைய கிறிஸ்தவ கூடுகைகளில் ஜெபம் செய்யப்பட்டது. இவருக்காக காணிக்கையும் எடுத்தார்கள். இதை பார்த்த கமல் சலீமின் மனம் உடைந்தது. அல்லாவிடம் ஜெபம் செய்தார். தீவிரவாத முகாம்களில் அன்பை பற்றி போதிதிராத காரணத்தினால் இவர் கிறிஸ்தவரின் அன்பை புரிந்து கொள்ளவில்லை. ஏன்? அல்லா தன்னை கைவிட்டு விட்டாரோ? ஏன் என்னை இனிலமைக்கு ஆளாக்கினார் என்று இவர் கேள்விக்கு அல்லாஹ்விடம் இருந்து பதில் வரவில்லை. “அல்லாஹ், என்னை ஏன் எதிரிகள் கைகளில் ஒப்படைத்தாய்? இவர் அல்லாஹ்வின் அற்புதத்தை பார்க்க விரும்பினார். “அல்லாஹ்.. நீர் இருப்பது உண்மையானால், நான் உன் குரலை கேட்க வேண்டும்என்று கதறினார். ஒன்றும் நடக்கவில்லை.

அநேரத்தில் இவரின் மனதில்ஏன் நாம் ஆபிரகாமின் தேவன், இசாக்கின் தேவன், யாகோபின் தேவனை கூப்பிடகூடாது?” என்ற கேள்வி எழுந்தது. அதி முதல்யேகோவா தேவனைநோக்கி கூப்பிட ஆரம்பித்தார். அப்போது ஆணிகள் கடாவபட்ட இரு கரங்கள் இவருக்கு முன்பாக பயங்கர பரிசுத்த தேவன் காண்பித்தார்.

இயேசு கிறிஸ்து கமல் சலீமிடம் பேச ஆரம்பித்தார். அவரின் இனிய குரலை முதன் முதலாக கமல் சலீம் கேட்டார். பரிசுத்த தேவன் தான் கமல் சலீமை எவ்வளவாக நேசிக்கிறார் என்பதை அன்போடு, கனிவோடு பகிர்ந்து கொண்டார். அதன் பிறகு கமல் சலீமின் காயங்கள் முழுவதும் ஆறிப்போனது. அதிசயத்தின் தேவன் மீண்டும் ஓர் சவுலை பவுலாக மாற்றினார். அல்லேலூயா…. ஆமென்..

வேதாகமத்தை வாசிக்க வாசிக்க தேவன் தன்னிடம் பேசுவதை உணர்ந்தார். இன்று கமல் சலீம் அரசியல்வாதிகளுக்கும், ராணுவ தலைவர்களுக்கும், உள்துறை நிபுணர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், சட்ட வல்லுனர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆலயங்கள், வழிபாட்டு தலங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் வரவேற்கும் பண்புடைய முகமதிய மக்களுக்கும் போதித்து வருகிறார்.

அன்பார்ந்த கிறிஸ்தவ விசுவாசிகளே, இவரை போன்ற ஆயிரம் ஆயிரம் சாட்சிகள் நம்மை சுற்றிலும் உள்ளன. ஜெபியுங்கள். அன்பு கூறுங்கள். தேவன் உங்கள் அருகில் உள்ள அனைவரிடமும் பேச முடியும். நம்மை முழுவதுமாக தாழ்த்துவோம்.

எபிரெயர்.12: 1. ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்

மேலும் இவரை பற்றி.. http://kamalsaleem.com/

இவர் எழுதிய புத்தகம்

The Blood of Lambs: A Former Terrorist’s Memoir of Death and Redemption

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *