போதை பொருளும் மதுபானமும்

tuticorin-boys

இஸ்லாமிய நாடுகளில் அநேக வாலிப யுவதிகள் போதை போருட்களுக்கும் மதுபானத்துக்கும் அடிமையாகி வாழ்கிறார்கள். இஸ்லாம் இவற்றை தடைசெய்துள்ளது. ஆனாலும் 100 வீதம் இஸ்லாமியர் வாழும் நாடுகளில் அநேக வாலிப யுவதிகள் போதை பொருளுக்கு அடிமையாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

 

போலத் தனது இளவயதில் தன் தந்தை எப்படி குடி போதையால் தன் சொத்துக்ளையெல்லாம் அழித்தார் என்பதை நன்றாக அவதானித்து, தன் வாழ்வில் தான் அப்படியாகிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.

 

ஒரு வாலிப மருத்துவனாக பணியாற்றிய அவனை சக ஊழியர்களின் வற்புறுத்துதலினால் ஒரு கப் விஸ்கி பருகினான். நாலடைவில் அவனை அறியாமலேயே மதுபானம் இல்லாமல் அவனால் வேலையில் ஆர்வம் காட்ட முடியவில்லை.

 

சிறிது காலத்தில் தன் வேலையை இழக்கவேண்டி ஏற்பட்டது. குடும்பம் நடுவீதிக்கு வந்தது. தன் தந்தையை விடவும் போலத் மோசமான நிலைமைக்கு வந்துவிட்டான்.

 

அவன் மனைவிக்கு கிறிஸ்த ஊழியர்களின் தொடர்ப்பு கிடைத்தது. உண்மை கிறிஸ்தவர்கள் அடிமைத்தனத் திலும் நெருக்கத்திலும் உள்ளவர்களை ஆதரித்து உதவிகள் செய்து அந்த அடிமைத்தனத்திலிருந்து வெளியேற உதவுவார்கள் என்பதை அவள் அறிந்து, அப்படி சிகிச்சை கொடுக்கும் ஒரு கிறிஸ்த வீட்டுக்கு தன் கணவரை அழைத்துச் சென்றாள். இப்பொழுது போலத் விடுதலையின் பாதையில் இருக்கிறான்.

 

துஆ

 

  1. போலத் போன்ற இஸ்லாமிய வாலிபர்கள் கிறிஸ்துவின் விடுதலையை நோக்கி செல்லும் பாதையில் நின்று தங்கள் பயணத்தை ஆரம்பித்துள்ளார்களுக்காக துஆ செய்வோம்.
  2. போதைக்கு அடிமையான வாலிபர்கள் இருக்கும் இஸ்லாமிய குடும்பங்களுக்காக துஆ செய்வோம்.
  3. போதை பொருளுக்கு அடிமையானவர்கள் மத்தியில் ஊழியம் செய்யும் தேவ மனிதர்களுக்காகவும் அவர்கள் தேவைகளை இறைவன் சந்திக்கவேண்டும் என்றும் துஆ செய்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *