மக்கள் ஈஸா அல் மஸீஹ்வைச் சார்ந்துகொள்ளுதல்

மக்கள் ஈஸா அல் மஸீஹ்வைச் சார்ந்துகொள்ளுதல்


23وَلَمَّا كَانَ فِي أُورُشَلِيمَ فِي عِيدِ الْفِصْحِ، آمَنَ كَثِيرُونَ بِاسْمِهِ، إِذْ رَأَوْا الآيَاتِ الَّتِي صَنَعَ. 24لكِنَّ يَسُوعَ لَمْ يَأْتَمِنْهُمْ عَلَى نَفْسِهِ، لأَنَّهُ كَانَ يَعْرِفُ الْجَمِيعَ. 25وَلأَنَّهُ لَمْ يَكُنْ مُحْتَاجًا أَنْ يَشْهَدَ أَحَدٌ عَنِ الإِنْسَانِ، لأَنَّهُ عَلِمَ مَا كَانَ فِي الإِنْسَانِ.

 

இன்ஜீல் (யோவான் 2:23-25)


பஸ்காபண்டிகையிலே அவர் எருசலேமிலிருக்கையில், அவர் செய்த அற்புதங்களை அநேகர் கண்டு, அவருடைய நாமத்தில் விசுவாசம் வைத்தார்கள். 24 அப்படியிருந்தும், இயேசு எல்லாரையும் அறிந்திருந்தபடியால், அவர்களை நம்பி இணங்கவில்லை. 25 மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக்குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை.

யூத சமூகத்தினர் தங்களுடைய மூதாதையர்கள் எகிப்தைவிட்டு புறப்பட்டு வந்தபோது அவர்களைப் பாதுகாத்த பஸ்கா ஆட்டுக்குட்டியை நினைத்துக் கொண்டு, தாங்கள் கொர்பானி கொடுத்த ஆட்டுக்குட்டியைப் பகிர்ந்து உண்டார்கள்.

 

இறைவனால் ஏற்படுத்தப்பட்ட ஆட்டுக்குட்டியாகிய ஈஸா அல் மஸீஹ் எருசலேமுக்கு வந்து, அநேக அற்புதங்களைச் செய்து தன்னுடைய அன்பையும் வல்லமையையும் காண்பித்தார். அதனால் மக்கள் கூட்டம் அவரைக் கவனித்தது, அவரைப் பற்றி பலர் பேசத் தொடங்கினார்: அவர் ஒரு நபியா, அல்லது ரஸுலா இல்யாஸ் நபியா, அல்லது ஒருவேளை மஸீஹாக இருப்பாரோ? என்றெல்லாம் முணு முணுத்துக்கொண்டார்கள். பலர் அவரிடம் ஈர்ப்புண்டு அவர்இறைவனிடமிருந்துவந்தவர்என்றுஈமான் கொண்டார்கள்.

 

ஈஸா அல் மஸீஹ் அவர்களுடைய இருதயத்தைப் பார்த்தார், ஆனால் அவர்களில் யாரையும் தன்னுடைய சீஷனாகச் சேர்த்துக் கொள்ளவில்லை. அவர்கள் அவருடைய இறைத்தன்மையை இன்னும் புரிந்து கொள்ளவில்லை, இன்னும் உலகப் பிரகாரமாகவே சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய சிந்தனையில் ரோமர்களுடைய ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவது, சரியான வேலை கிடைப்பது, வசதியான எதிர் காலத்தைப் பெற்றுக்கொள்வது போன்ற காரியங்களே காணப்பட்டது. ஈஸா அல் மஸீஹ் எல்லா மனிதர்களையும் அறிந்திருந்தார்; எந்த இருதயமும் அவருடைய கண்களுக்கு மறைந்திருக்கவில்லை. யாருமே இறைவனை உண்மையாகத் தேடவில்லை. அவர்கள் உண்மையிலேயே இறைவனைத் தேடியிருந்தால், அவர்கள் தங்களுடைய பாவங்களை அறிக்கைசெய்து மனந்திரும்பி, ஜோர்தான் நதியில் ஞானஸ்நானம் பெற்றிருப்பார்கள்.

 

ஈஸா மஸீஹ் உங்கள் இருதயத்தையும், சிந்தனைகளையும், விண்ணப்பங்களையும், பாவங்களையும் அறிந்திருக்கிறார். உங்களுடைய சிந்தனைகளையும் அவைகள் எங்கிருந்து வருகிறது என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். நீங்கள் ஒரு ஒழுக்கமான நீதியுள்ள வாழ்க்கையை வாழ விரும்புகிறீர்கள் என்று அவர் அறிவார். உங்கள் பெருமை எப்போது அசைக்கப்படும்? உங்கள் சுய மரியாதையிலிருந்து நீங்கள் எப்போது திரும்பி ரூஹுல் குத்தூஸினால் நிரம்புவீர்கள்?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *