யாரை பின்பற்றப்போகிறீர்கள்?

follow me

முந்தைய காலங்களை விட, தற்காலத்தில் விலாசம் சரியாக தெரியாத ஊர்களுக்குச் செல்வது மிகவும் சுலபமாகும். புதிய சாதனங்களாகிய ஜிபிஎஸ் (GPS) மற்றும் கூகுள் மேப் (Google Map) போன்றவை நம்முடைய விலாசதேடலை சுலபமாக்கிவிட்டன. பழங்காலங்களில், நாம் சரியான விலாசத்தை சென்றடையவேண்டுமென்றால், அவ்வழிகளை அறிந்து வைத்திருக்கின்ற நபரின் உதவியை நாடவேண்டும்.

அதுபோல்தான் சுவனபதியை அடையவேண்டும் என்றால் அதற்கான வழியை அறிந்தவருடைய உதவியைதான் நாடவேண்டும் என்பது நான் சொல்லித்தான் நீங்கள் தெரியவேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த கட்டுரையில் ஈஸா அல் மஸீஹ் மற்றும் முஹமது நபியவர்களுடைய வாழ்க்கையின் கடைசி நாட்களை நாம் அவதானித்து இருவரில் யார் சுவனம் செல்லும் வழியை நமக்குக் காட்ட தகுதியானவர் என்பதை ஆராய்வோம்.

ஈஸா அல் மஸீஹும் முஹம்மது நபியும் தங்களின் துன்யா வாழ்க்கையின் முடிவுக்கு பிறகு தங்களின் நிலை என்னவாக இருக்கும் என்று சொல்லியுள்ளார்கள்.  ஈஸா அல் மஸீஹ் தம்முடைய வாழ்நாளின் கடைசி வாரத்தில், அனேக கட்டளைகளை சீடர்களுக்கு கொடுத்தார். மேலும் சீடர்கள் உற்சாகம் அடையும் வகையில் இதர முக்கியமான விவரங்களையும் பகிர்ந்துக் கொண்டார். இந்த உரையாடல்களில் அவர் சொன்ன அதிமுக்கியமான விவரம் என்னவென்றால், “தாம் சீடர்களை விட்டுச் செல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது, அதாவது, ஈஸா அல் மஸீஹ்  சென்று அவர்களுக்காக ஒரு இடத்தை ஆயத்தப்படுத்தி, அதன் பிறகு அவர்கள் தம்மோடு சொர்க்கத்தில் நிரந்தரமாக தங்கும் படி அழைத்துச் செல்வார்” என்று கூறினார்.

என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.  நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன். ( யோவான் 14:2-3)

இந்த கட்டுரையின் கருப்பொருள் ‘ஈஸா அல் மஸீஹ் பிதாவோடு சொர்க்கத்தில் இருப்பார் என்றும், அவர் தன்னை பின்பற்றுபவர்களுக்கு இடத்தை ஆயத்தப்படுத்துவார்’ என்றும் அவர் கொடுத்த வாக்கு பற்றியதாகும ஈஸா அல் மஸீஹ் தாம் எங்கே போகிறார் என்று அறிந்திருந்தார் மேலும், அங்கு (சொர்க்கம்) சென்ற பிறகு அவர் என்ன செய்யப்போகிறார் என்றும் அறிந்திருந்தார்.

முஹம்மது நபி தம்முடைய மரணத்திற்கு பிறகு எங்கே போவார் என்று ஏதாவது சொல்லியுள்ளாரா? முஹம்மது நபி மரித்த பிறகு அவர் அல்லாஹ்வோடு இருப்பார் என்று முஹம்மது சொல்லியிருப்பார் என்று பொதுவாக எல்லாரும் நினைத்திருப்பார்கள், ஆனால் அது தவறாகும். முஹம்மது நபி இப்படி சொல்லவில்லை, அவர் வேறுவகையாக சொல்லியுள்ளார்.  முஸ்லிம்கள் அதிகார பூர்வமானதாக நம்பும் புகாரி ஹதீஸில் ஆரம்ப கால முஸ்லிம்களின் மத்தியில் ஒரு உரையாடல் நடக்கிறது. அதாவது, ஒருவர் மரித்துவிடுகிறார் அவர் சொர்க்கத்தில் இருப்பார் என்று சொல்லப்படும் போது, முஹம்மது நபி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.  மேலும், மரணத்திற்கு பிறகு ஒருவருக்கு என்ன நேரிடும் (சொர்க்கமா? நரகமா?) என்பது நமக்கு தெரியாது என்று முஹம்மது நபி கூறுகிறார். மேலும், முஹம்மது “நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் என்னுடைய நிலைமை (நாளை) என்னவாகும் என்பது எனக்குத் தெரியாது” என்றும் கூறுகிறார். இந்த ஹதீஸ் ஆதாரபூர்வமான ஹதீஸ் ஆகும், இதே விவரத்தை இன்னும் சில ஹதீஸ்களிலும் காணலாம்[1], அந்த ஹதீஸை அடிக்குறிப்பில் படிக்கவும்.

ஒரு அனுபவ சாட்சி புத்தகத்திலிருந்து ஒரு மேற்கோளை இப்போது படியுங்கள்:

“நான் என் தாத்தாவிடம் சென்று, “முஹம்மது நபி மரிக்கும் போது அவர் என்ன கூறினார்?” என்று கேள்வி கேட்டேன். அவர் என்னிடம் முஹம்மது சொன்னவைகளைச் சொன்னார். அதன் பிறகு நான் என் தாத்தாவிடம் “ஈஸா அல் மஸீஹை பாருங்கள், தன் பிதாவினிடத்தில் அவர் போவதாகச் சொன்னார், தன்னை பின்பற்றுபவர்களுக்காக இடத்தை ஆயத்தப்படுத்துவதாக அவர் கூறினார், அதன் பிறகு அவர் திரும்பி வந்து தம்முடையவர்களை அழைத்துச் செல்வதாகச் சொன்னார். ஆனால், தாம் எங்கு போகிறோம் என்று முஹம்மதுவிற்கே தெரியவில்லை. இப்போது சொல்லுங்கள், யாரை நீங்கள் பின்பற்றப்போகிறீர்கள்?” என்று கேட்டேன். என் தாத்தா “யாருக்கு தாம் போவது எங்கே என்று தெரிந்திருக்கிறதோ, அவரைத் தான் நான் பின்பற்றப்போகிறேன்” என்றுச் சொன்னார். “நான் சர்சுக்கு இப்போது போகப்போகிறேன்” என்றுச் சொன்னேன். இப்படித் தான் நான் ஈஸா அல் மஸீஹ்வை  அறிந்துக் கொண்டேன். [2]

நீங்கள் எங்கே போகப்போகிறீர்கள்? இந்த கேள்வியை இப்படி கேட்டால் தான் சரியாக இருக்கும் – நீங்கள் அங்கே எப்படி போகப்போகிறீர்கள்?  தான் எங்கே போகிறேன் என்று தெரிந்திருக்கின்றவரை (மஸீஹ்வை) நீங்கள் பின்பற்றப்போகிறீர்களா? அல்லது தன்னுடைய பயணம் எங்கே போய் முடியும் என்று தெரியாதவரை (முஹம்மதுவை) பின்பற்றப்போகிறீர்களா?

அடிக்குறிப்புக்கள்:

[1] புகாரி ஹதீஸ் எண்: 1243.

நபி(ஸல்) அவர்களிடம் பைஅத் செய்திருந்த அன்சாரிப் பெண்மணியான உம்முல் அலா(ரலி) அறிவித்தார்.

வந்த முஹாஜிர்களில் யார் யாருடைய வீட்டில் தங்குவது என்பதையறிய சீட்டுக் குலுக்கிப் போட்டுக் கொண்டிருந்தபோது உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) எங்கள் வீட்டில் தங்குவது என முடிவானது. அதன்படி அவரை எங்கள் வீட்டில் தங்க வைத்தோம். பிறகு அவர் நோயுற்று மரணமடைந்தார். அவரின் உடல் குளிப்பாட்டப்பட்டு அவரின் ஆடையிலேயே கஃபனிடப்பட்டதும் நபி(ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். நான் (உஸ்மானை நோக்கி), ‘ஸாயிபின் தந்தையே! உம் மீது இறையருள் உண்டாகட்டும்! அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சி கூறுகிறேன்எனக் கூறினேன். உடனே, நபி(ஸல்) அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பது உனக்கெப்படித் தெரியும்?’ என்று கேட்டார்கள்

அல்லாஹ்வின்தூதர் அவர்களே! என்னுடைய தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். பின் யாரைத்தான் அல்லாஹ் கண்ணியப்படுத்துவான்?’ என கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இவர் மரணமடைந்துவிட்டார். எனவே, அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவர் விஷயத்தில் நன்மையையே விரும்புகிறேன். ஆயினும் நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் என்னுடைய நிலைமை (நாளை) என்னவாகும் என்பது எனக்குத் தெரியாதுஎன்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அதற்குப் பிறகு நான் யார் விஷயத்திலும் (அவ்வாறு) பாராட்டிக் கூறுவதேயில்லை.”  Volume :2 Book :23  (மேலும் பார்க்க ஹதீஸ்கள்: 2687, 3929 & 7003)

 

5 Responses to யாரை பின்பற்றப்போகிறீர்கள்?

 1. Safran says:

  ஐயோ ஏன் அய்யா புழுகி திரியுரேள்??

  நீங்கள் குறிப்பிட்ட ஹதீஸ் நபியவர்களின் இறுதி காலத்தில் நடந்ததல்ல..

  நபியவர்களுக்கு அறிவித்து கொடுக்கப்பட முன்பு, தன் நிலையை அறியவில்லை

  பிறகு அல்லாஹ் அறிவித்தான்.. அதில் நான் சுவர்க்க வாசலுக்கு வரும்வரை சுவர்க்கம் திறக்கப்படாது. நானே முதலில் நுழைவேன் என்று அவர்கள் கூறினார்கள்.

  நபியவர்கள் தன் சமூதாயத்திற்காக இறைவனிடம் பரிந்து பேசுவேன் என்றும் கூறியிருக்கிறார்கள்.

  எனவே உங்கள் வாதம் தவறு…

  யேசு ஜி அவர்களது நிலையை அலசுவோம்!

  யேசு ஜி அவர்கள் சொன்னது ஆரம்ப காலத்திலாகும்.. அவரை பாவி என்பதால் தேவன் ஜி கைவிட்டுவிட்டார்

  அதனால், யேசு என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்று புலம்பினார்.
  மத்தேயு 27:46 மாற்கு 15:34

  இது தீர்க்கதரிசனத்தை நிறைவேற்ற பேசியது என்று நினைக்கலாம். ஆனால் உண்மையில் தீர்கதரிசனமல்ல

  சங்கீதம் 22:1 இன் ஒரு பகுதியை தான் யேசு கூறியிருக்கிறார். எனவே அதை தீர்க்கதரிசனமாக பார்க்கமுடியாது..

  எனவே இயேசுவின் நிலை அவர் அறுயவில்லை

  • Irainesan says:

   மதிப்பிற்குறிய சகோதரரே,

   நீங்கள் ஹதீஸ் நடந்த காலத்தை குறிக்கிறீர்கள். ஆனால் அதில் சொல்லப்பட்ட கருத்துக்களை மறுக்கவில்லை. உண்மையில் இந்த சம்பவம் இஸ்லாத்தின் 13வது வருடத்தில் நடந்தத சம்பவம். (23 வருடங்களே முஹமது நபி இஸ்லாத்தை பிரச்சாரம் செய்தார்கள் என்று இஸ்லாமியர் நம்புகின்றனர்) ஆகவே இது இரண்டாவது பகுதியின் ஆரம்பம் என்பதே சரியானது.
   ஆனால் அந்த மதீனத்து பெண்மணி (அறிவிப்பவர்) இதனை முஹமது நபி மரித்த பிறகே அறிவித்தார் என்பதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்.
   அதனோடு சில ஹதீஸ்களின் எண்களை மட்டும் குறிப்பிட்டுள்ளேன். அவைகளையும் வாசித்து முழு விவரத்தையும் புரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

   • Irish says:

    a couple days ago that Mr. Zullo would be back on Aug 1 . . . Has anyone heard from Mr. Zullo? . . . If Romney and crew are stupid enough to pick Rubio then they have no right to complain about Obm39&#ai;s fraudulent black ass!

  • Irainesan says:

   மேலும் நீங்கள் இயேசுவைப் பற்றி சில காரியங்கள் எழுதியிருக்கிறீாகள். அவற்றுக்கான பதில்கள் ஏற்கனவே இந்த தளத்தில் கட்டுரைகளாக பதியப்பட்டுள்ளது. அவற்றை வாசித்து ஏதும் சந்தேகம் இருந்தால் தாராளமாக கேட்கலாம்.
   நன்றி

   • Jodi says:

    SO, funny sto….yr. Last year, while everyone was at the Gaylord Opryland for Blissdom, I was actually at a conference for work in downtown Nashville (CRS… Country Radio Seminar).I was tweeting with some of my blogger friends while they were there. As much fun as I was having (FUN), it stunk not to be able to see my favorite bloggers.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *