இறைவனை “அல்லாஹ்” என்று அழைக்கலாமா?

 

இஸ்லாமிய மரபு மொழிபெயர்ப்பு

 

இஸ்லாமும் கிறிஸ்தவம் போன்றே ஒரு உலக மதமாகும். அனைவரையும் முஸ்லீம்களாக மாற்றுவதே அதன் குறிக்கோளாகும்.

ஏழாம் நூற்றாண்டின் அரபு கலாச்சாரத்தின் அணுகுமுறையை இன்றும் தவிர்க்கமுடியாமல் இருக்கிறது இஸ்லாம். உலகெங்கும் உள்ள முஸ்லீம்கள் அரபுமொழியில் வணக்க வழிபாடுகள் செய்ய முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வேத நூல் அரபியில் மட்டுமே இருக்கிறது. சில மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தாலும் அவை கருத்தாக்கம் என்பதால் அவற்றை குர்ஆனாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

நாள் தோறும் கிறிஸ்தவம் சுதேச மக்கள் கலாச்சாரத்துக்கும் அவர்கள் மொழிக்கும் மொழியாக்கம் செய்யப்பட்டுக்கொண்டே இருக்கிறது. நித்திய இறைவனையும் அவர் படைப்புகள் பற்றிய செய்திகளையும் யூத கலாச்சரத்திலிருந்து தத்தெடுத்து, அவர்கள் சொந்த மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படுகிறது.

சுதேச கலாச்சாரத்துக்கு சுவிசேஷத்தை மொழியாக்கம் செய்து கொடுப்பதில் கிறிஸ்தவம் முன்னிலையில் உள்ளது. உலகெங்கிலுமுள்ள கிறிஸ்தவ சமுதாயத்தினர் அவர்களது சொந்த மொழிகளிலேயே இறைவனை வணங்குகிறார்கள். ஒரே இறைவனை ஆயிரக்கணக்கான பெயர்களில் அழைக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் அனைவரும் ஒரே கர்த்தர், ஒரே விசுவாசம், ஒரே ஞானஸ்நானம் (எபேசியர் 4:5) என்ற போதனையையே போதிக்கிறார்கள்.

சுவிசேஷம் உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகிறது. கிறிஸ்தவர்கள் தங்கள் எழுத்துக்களில் இறைவன் என்ற சொல்லுக்குப் பதிலாக அல்லாஹ் என்ற சொல்லை பாவிப்பது குறித்த பல கருத்து வேறுபாடுகள் உள்ளன.

சிலர் சொல்கிறார்கள் அல்லாஹ் என்பது வேறு ஒரு கடவுள். பாபிலோனிய சந்திர கடவுளின் பெயர்தான் அல்லாஹ்.

வேறு சிலர் அல்லாஹ் என்ற சொல் செமட்ரிக் மொழியின் எலோஹிம் என்ற சொல்லிலிருந்து வந்தது. எபிரேய பைபிளில் இந்த சொல்தான் கடவுளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று வாதாடுகிறார்கள்.

முஸ்லீம்கள் சந்திரக் கடவுளை வணங்கவில்லை என்பதை கிறிஸ்தவர்கள் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். முஹம்மது நபி பிறப்பதற்கு முன்பிருந்தே அரபு கிறிஸ்தவர்கள் கடவுளுக்கு அல்லாஹ் என்ற வார்த்தையைதான் பாவித்து வந்தார்கள்.

அதேபோன்று மேற்கு ஆபிரிக்காவின் ஹவ்சா மக்கள் குழுவும் (35 மில்லியன்) இந்தோனேசியாவின் இந்தோனேசியர்களும் (250 மில்லியன்)

பைபிளின் கடவுளை அல்லாஹ் என்ற வார்த்தையை கொண்டே அழைக்கிறார்கள்.

எந்த சொல்லை உச்சரிக்கிறோம் என்பதைவிட என்ன அர்த்ததில் உச்சரிக்கிறோம் என்பதே முக்கியமானது. கிறிஸ்துவுக்கான ஒவ்வொரு முஸ்லீம் இயக்கமும் அவர்கள் சொந்த மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பைபிளையே பயன்படுத்த விரும்புகிறார்கள். இதனை இஸ்லாமிய மரபு மொழிபெயர்ப்பு என்று அழைக்கின்றனர். சுதேச மொழிகளுக்கும் கலாச்சாரங்களுக்கும் மொழியாக்கம் செய்ய முடியுமாக இருப்பது கிறிஸ்தவ விசுவாசத்தின் சிறப்பம்சமாகும்.

இறைவன் ஒவ்வொரு மக்கள் குழுவுக்கும் அவர்கள் சொந்த மொழி, கலாச்சாரத்தில் தன்னை வெளிப்படுத்துவதையிட்டு நாம் றப்புல் ஆலமீனுக்குள் களிகூறுவோம். மொழியாக்கம் செய்யப்படும் ஒவ்வொரு வார்த்தையிலும் பைபிளில் அர்த்தம் உள்ளது என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்வோம்.

One Response to இறைவனை “அல்லாஹ்” என்று அழைக்கலாமா?

  1. Delia says:

    You really make it appear really easy with your prteineatson however I in finding this matter to be actually something which I think I’d by no means understand. It kind of feels too complicated and extremely huge for me. I am looking forward for your next publish, I¡¦ll attempt to get the hold of it!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *