எமது பணி என்ன?

எமது பணி என்ன?

 

 
அன்புள்ளசகோதரன் ஜலால்டீன்அவர்களுக்கு,

 

 
அஸ்ஸலாமுஅலைக்கும்.

 

 
தங்களின்கடிதம்கிடைத்தது. மிகவும்சந்தோஷம்அடைந்தேன். றபீல்உங்களைப்பற்றியும்சத்தியத்தில்வாழஉங்களுக்கிருக்கும்அவாவைப்பற்றியும்தெளிவாகக்கூறினார். எல்லாம்வல்லஇறைவனுக்கேபுகழ்அனைத்தும். அல்ஹம்துலில்லாஹ்.

 

 
உங்கள்பதில்கடிதத்தில்இப்படியொருவாசகம்இருந்தது–  “சகோதரன்இறைநேசன், தாங்கள்அல்குர்ஆனையும்கற்றவர், ஹதீஸ்களையும்தெரிந்தவர். ஆகமங்களையும்கற்றவர். உங்களிடம்விரிவானவிசாலமானஅறிவுப்பொக்கிஷங்கள்இருக்கும்என்றுநினைக்கிறேன்.”- இதனைமுற்றாகநான்மறுக்கவில்லை. ஆனாலும் அநேகநேரம்நாங்கள்பிழைவிடுகிறஒருஇடம், இதுஎன்பதைஞாபகப்படுத்தவிரும்புகிறேன்.

 

 
அறிவோஅறிஞர்களோநேர்வழியின்பால்வழிநடாத்துபவர்கள்என்றுகருதினால்தத்துவஞானங்களைத்தான்நாங்கள்ஏற்கவேண்டிவரும்.

 

ஓஷோபோன்றவர்களின்புத்தகங்கள்மூளைக்குநல்லவிருந்து. மனதிற்குஇனிமை. ஆனால்எங்களைஅறியாமலேயேஎங்களுக்குள்நானேஇறைவன்எனும்கர்வத்தைகொண்டுவந்துவிடும். “நான்யார்?” என்பதுமிகவும்முக்கியமானகேள்விதான். இன்ஷாஅல்லாஹ், அதனைஅடுத்தகடிதத்தில்பார்ப்போம்.

 

 
என்னோடுகடிதத்தொடர்ப்பிலுள்ளஎனதுபலசகோதரர்களுக்குஎன்னைச்சந்திக்கவேண்டும்எனும்ஆசைஇருக்கின்றது. இப்படிகடிதம்வரும்பொழுதெல்லாம்நான்இறைவனிடம்மன்னிப்புக்கேட்டுவருகின்றேன். ஏனென்றால்எனதுகடமையைசரியாகசெய்யவில்லைஎனும்குற்றச்சாட்டுஎனக்குள்தோன்றுகின்றது.

 

 
‘ஒருசெல்வந்தன்தனதுசொத்துக்களையும்தனதுஅநேகபிள்ளைகளையும்பராமரிக்கும்பொறுப்பைஒருவனிடம்கொடுத்துவிட்டு, தனதுவேலையாகபலவருடங்கள்வெளிநாட்டிற்குச்சென்றுவிடுகிறான். அவன்திரும்பிவந்துபார்க்கும்போது, அவனுடையபிள்ளைகள்அவனைஅறியவுமில்லை, அவனைஏற்றுக்கொள்ளவுமில்லை. அந்தவேலைக்காரனையேதங்கள்தகப்பனாகஏற்றுக்கொண்டனர்.’

 

 
அந்தசெல்வந்தனின்நிலைமையையோசித்துப்பாருங்கள்! அவன்எவ்வளவுவேதனைஅடைந்திருப்பான்? இந்தக்கதையில்குற்றவாளியார்?

 

 
பிள்ளைகளைகுற்றவாளியாககருதமுடியாது. செல்வந்தனையும்குற்றவாளியாககருதமுடியாது. ஏனெனில் அவன்உரிமையாளன், தீர்மானம்எடுக்கஅதிகாரமுடையவன். அப்படியானால்வேலைக்காரன்?!

 

 
நிச்சயமாகஅவன்தான்குற்றவாளி. ஏனென்றால்அவன்தனதுகடமையைசரிவரசெய்யவில்லை. பிள்ளைகளின்தகப்பனைஅறிமுகப்படுத்துவதும்தான்யார்என்பதைபிள்ளைகளுக்குசொல்லிக்கொடுத்துவளர்ப்பதும்அவனது  கடமையே!
 
அன்புசகோதரனே, நானும்இந்தவேலைக்காரனின்பணியைத்தான்செய்கிறேன். நீங்கள்எனக்குஅதிகமுக்கியத்தும்கொடுப்பீர்களானால்நானும்குற்றவாளியாவேன். உங்களுக்குஉங்கள்தகப்பனைஅறிமுகப்படுத்துவதேஎனதுகடமை. அதனைத்தான்நான்செய்கிறேன். நான்ஒருவேலைக்காரன்என்பதைமிகவும்சந்தோஷத்துடன்கூறிக்கொள்கிறேன். நானும்றபீலும்இறைவனுடையவேலைக்காரர்கள். எங்கள்இருவரில்யாரும்உயர்ந்தவரோதாழ்ந்தவரோஇல்லை. எங்கள்இருவரையும்இன்னும்பலரையும்ஈஸாஅல்மஸீஹ்தனதுஇரண்டாம்வருகையின்போது, அவருடையபிள்ளைகள்அவரைஅறிந்துகொள்ளஆயத்தம்செய்வதற்காக, நியமித்துள்ளார். எமதுபொறுப்பிலிருந்துநாங்கள்விலகினால்நரகநெருப்பில்தள்ளப்படுவோம். நாங்களும்சுவனபதியில்ஈஸாஅல்மஸீஹ்அவர்களோடுவாழஆசைப்படுகிறோம்.

 

 
நான்இப்படிக்கூறுவதால்உங்களைசந்திக்கமறுத்துவிட்டதாகநினைக்கவேண்டாம். இறைவனின்வழிநடாத்துதலின்படி, நிச்சயமாகஒருநாள்சந்திப்போம். அதுஎப்பொழுதுஎன்றுதெளிவாகசொல்லமுடியவில்லை.

 

 
எங்களை ஏக இறைவன் நேர்வழியில் நடத்த எப்பொழுதும் துஆவில் இருப்போம்.

 

இப்படிக்கு

 

இறைநேசன்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *