கலிமதுல்லாஹ்

கலிமதுல்லாஹ்

 

 
 
அன்புள்ள சகோதரன் நூருல் அமீன் அவர்களுக்கு,

 

 
அஸ்ஸலாமு அலைக்கும்
 
தாங்களின் பதில் கடிதம் கண்டு மிகவும் சந்தோமடைந்தேன். உங்களினதும் உங்கள் குடும்பத்தாரினதும் சுகத்திற்காக அல்லாஹ்வை துதிக்கிறேன் அல்ஹம்துலில்லாஹ். நானும் என் குடும்பத்தாரும் அல்லாஹ்வின் துணையால் சுகமாக வாழ்கிறோம்.
 
உங்கள் பெயர் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. நம்பிக்கையாளனின் ஒளிஎன்பது உங்கள் பெயருக்கான அர்த்தம் என்று நினைக்கின்றேன். நான் பிழையாக இருந்தால் தயவுசெய்து திருத்தித் தாருங்கள். மேலும் உங்கள் சிந்தனையும் எனக்கு பிடித்திருக்கிறது. தெளிவாக ஆராய்வதில் உங்களுக்குள்ள ஆர்வம் என் உள்ளத்தில் உங்கள் மீது ஒரு மதிப்பு ஏற்பட்டுவிட்டது.
மேலும் வள்ள நிலைமை எப்படியுள்ளது. நீங்கள் அறிந்த யாராவது பாதிப்புக்குள்ளாகியுள்ளனரா? நாங்கள் மிகவும் வருந்துகிறோம். துன்யாவின் முடிவு நெருங்கிவிட்டது எனும் செய்தி எம்மை அச்சமூட்டி எச்சாரிக்கை செய்கிறது. யா அல்லாஹ் நேரான வழியில் எங்களை நடத்துவாயாக!

 

 
இப்பொழுது உங்கள் கேள்விகளுக்கான பதில்களை பார்ப்போம்.
 
2வது கேள்வியில் அஹமது எனும் ஒருவர் வருவார் என்று ஆலஇம்ரான் 3:50இல் கூறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் எனது குர்ஆன் இப்படித்தான் கூறுகிறது.
 
45       மலக்குகள் கூறினார்கள்மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ். மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்.         

 

46       ”மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார்.இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்.”           

 

47       (அச்சமயம் மர்யம்) கூறினார்; “என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?” (அதற்கு) அவன் கூறினான்; “அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் ´ஆகுக´எனக்கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.

 

48       இன்னும் அவருக்கு அவன் வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பான். 
49       இஸ்ராயீலின் சந்ததியனருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான். இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்) “நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன். நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன். அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன். அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன். நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது (என்று கூறினார்).  
50       “எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்பிக்கவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும், உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன், ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்என்னைப் பின் பற்றுங்கள்.”   

 

51       “நிச்சயமாக அல்லாஹ்வே என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனும் ஆவான். ஆகவே அவனையே வணங்குங்கள். இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம் என்னும்) நேரான விழியாகும்.  

 

 
எல்லா மனிதர்களும்நேரான வழியை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தங்களின் சிந்தைக்கு சரியென்று தோன்றியவற்றை மற்றவர்களுக்குப் போதித்தனர். சிலர் பின்பற்றினர் சிலர் எதிர்த்தனர். இவ்வாறு தோன்றிய வழிகளுல் ஒன்றுதான் தரீகதுல் முப்லிஹீன் (பயில்வான் பாட்டி). பயில்வான் தன்னுடைய பகுத்தரிவாற்றலால் கண்டுபிடித்த வழியே அது. இவ்வாறு ஒவ்வொரு ஜமாஅத்தையும் மதங்களையும் ஆராய்ந்து பார்த்தால் அறிந்துக்கொள்ளமுடியும். எல்லா மதத் தலைவர்களும் இந்த வழியில் செல்லுங்கள், அந்த வழியில் செல்லுங்கள் சொன்னார்களே தவிர, நானே வழி என்று யாரும் சொல்லவில்லை.
 
ஆனால் ஈஸா அல் மஸீஹ் அவர்கள் வழியும், உண்மையும், வாழ்வும் நானே. என் மூலமாய் அன்றி ஒருவனும் பிதாவினிடத்தில் வரமுடியாது. நீங்கள் உண்மையாக என்னை அறிந்திருந்தால், என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள். இப்போதிருந்தே நீங்கள் அவரை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டும் இருக்கிறீர்கள்என்றார்.
அதற்கு பிலிப்பு, “யா ரப்பே, பிதாவை எங்களுக்குக் காண்பியும். அது எங்களுக்குப் போதும்என்றான்.
அப்பொழுது ஈஸா அவனிடம் சொன்னதாவது: பிலிப்புவே, நான் இவ்வளவு காலம் உங்களோடிருந்தும், நீ இன்னும் என்னை அறிந்துகொள்ளாதிருக்கிறாயா? என்னைக் கண்டிருக்கிறவன் எவனும் பிதாவைக் கண்டிருக்கிறான். அப்படியிருக்க, ‘பிதாவை எங்களுக்குக் காண்பியும்என்று நீ எப்படிச் சொல்லலாம்? நான் பிதாவில் இருக்கிறதையும், பிதா என்னில் இருக்கிறதையும் நீ விசுவாசிக்க வில்லையா? நான் உங்களுக்குச் சொல்கிற இந்த வார்த்தைகள் என்னுடையதல்ல. அவை என் பிதாவின் வார்த்தைகளே. அவர் எனக்குள் இருந்து தனது செயல்களைச் செய்கிறார். நான் பிதாவில் இருக்கிறேன் என்றும், பிதா என்னில் இருக்கிறார் என்றும் நான் சொல்லும் போது அதை நம்புங்கள்: இல்லாவிட்டால் நான் செய்கிற அற்புதங்களின் நிமித்தமாவது அதை நம்புங்கள்.                            (இன்ஜீல் யோவான் 14:6-11)

 

 
அன்பு சகோதரனே,

 

மேற் குறிப்பிட்ட இறை வார்த்தைக் கூடாக நேரான வழி (ஸிராதுல் முஸ்தகீம்) எது என்பது தெளிவாக விளங்குகிறது. ஆகவே யா அல்லாஹ் எனக்கு நேரான வழியை காட்டுவாயாக (இஹ்தினஸ் ஸிராதல் முஸ்தகீம்) எனும் துஆ உங்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து தொனிக்கட்டும்.
 
இத்தோடு இக் கடிதத்தை நிறைவு செய்கிறேன். தொடர்ந்து வரும் கடிதங்களில் உங்கள் ஏனைய கேள்விகளுக்கு அல்லாஹ்வின் துனையோடு பதில் எழுதுகிறேன். இறைவனுக்காக உங்கள் நேரத்தை ஒதுக்கி எனக்கு கடிதம் எழுதியமைக்காக மீண்டும் நன்றி கூறுகிறேன்.
இப்படிக்கு உங்கள் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கும் நான்,

 

இறைநேசன்

 

One Response to கலிமதுல்லாஹ்

  1. இது ஒரு சிறப்பான பணி. கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் தங்களை வாழ்த்துகிறேன்.உங்கள் எழுத்துப் பாணி மிகவும் அருமை. முஸ்லிம்களால் புரிந்து கொள்ள கூடியதாக இருக்கும். முஸ்லிம்களையும் அவர்களின் நம்பிக்கைகளையும் தாக்கி மனமுறிவுண்டாக்கி எழுதாமல் சிறந்த நாகரீகமான வார்த்தைகளை பிரயோகித்து எழுதியுள்ளீர்கள்.

    இது மிகவும் நல்லதொரு ஆரம்பம்.
    இடைவிடாமல் தொடர்ந்து எழுதுங்கள். நிறுத்தி விட வேண்டாம். god bless u

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *