Archives: Main Images

இறை புத்திரனை  ஈமான் கொள்வதா?

Psalm 118-23

JOHN 3:17-21

யோவான் 3:17 – 21

17 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். 18 அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. 19 ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. 20 பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான். 21 சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.

 

யஹ்யா நபி  தன்னுடைய தேசத்திலிருக்கும் பட்டுப்போன மரங்களை வெட்டி, மனுக்குலத்தை நியாயம் தீர்க்கும் மஸீஹ்வை குறித்துப் பயான் செய்தார். ஆனால் ஈஸா அல் மஸீஹ் நிக்கோதேமுவிடம் பேசும்போது தான் நெருப்பினால் சுட்டெரிப் பதற்கு வராமல் இரட்சிப்பதற்காக வந்ததாகக் கூறுகிறார். நம்முடைய இரட்சகர் இரக்கமுள்ளவர். யஹ்யா நபியின் பதிலாள் பிராயச்சித்தத்தின் இரகசியத்தை அறிந்து கொண்ட போது, ஈஸா அல் மஸீஹ்வை உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற இறை ஆட்டுக்குட்டி என்று அழைத்தார்.

 

இறைவன் தம்முடைய அன்பினால் தம்முடைய குமாரன் யூதர்களுக்காக மட்டும் அனுப்பாமல், உலகத்திற்காக அனுப்பினார். 17ம் வசனத்தில் உலகம் என்ற வார்த்தை மூன்று முறை இடம்பெறுகிறது. புறவினத்து மக்களை நாய்களைப் போல நடத்திய யூதர்களுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் இறைவன் இப்ராஹிம் நபியின் சந்ததியை நேசிப்பதைப் போலவே அனைத்து இனங்களையும் நேசித்தார். எல்லோரும் நியாய தீர்ப்பிற்கு பாத்திரவான்களாயிருக்கிறார்கள். ஆனால் ஈஸா அல் மஸீஹ் நியாயம் தீர்க்கவராமல் மக்களை இரட்சிக்க வந்தார். அவர் உலகத்தின் பாவத்திற்கான நியாயத்தீர்ப்பை சிலுவையில் சுமப்பதன் மூலமாக உயர்த்தப்பட்ட சர்ப்பத்தின் உருவகத்தை நிறைவேற்றுகிறவர் என்பதை ஆரம்பத்திலிருந்தே அறிந்திருந்தார். இறைவனுடைய அன்புக்கு இனப்பாகுபாடு கிடையாது, அது அனைத்து மக்களுக்கும் உரியது.

இறைவனின் முகத்தைத் தேடுகிறீர்களா? அல்லது கரங்களை மட்டும் பார்க்கின்றீர்களா?

நாளாகமம் 7 14

“நாடு இப்படியே போச்சினா நம்ம பசங்கள்ட எதிர்காலம் என்னாவது!”

“இந்த நாட்டுல தொடர்ந்து வாழ்ந்தா நம்ம குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். US போற வழிய தேடணும்”

இப்படியான கருத்துக்கள் எமது சமுதாயத்தில் அடிக்கடி கேட்கக் கூடியதாகவுள்ளது. எதற்கு எடுத்தாலும் நாட்டையும் நாட்டை ஆள்கிறவர்களையும் குறை சொல்லிக்கொண்டே இருக்கிறோம். இப்படி குறை சொல்லி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்த பலர், கலாச்சாரப் பிரச்சினைகளால் பிள்ளைகளை அங்கேயே விட்டுவிட்டு நாடு திரும்பியவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களிடம் “ஏன் திரும்ப வந்துவிட்டீகள் என்று கேட்டால், “அந்த கலாச்சாரம் நமக்கு ஒத்துவராது, என் பையனையே எனக்கு திட்ட முடியல, உடனேயே அவன் பொலிஸுக்கு போன் செய்கிறான் என்று குழந்தைகள் தங்கள் கட்டுப்பாட்டை மீறிவிட்ட வேதனையில் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.

பல வருடங்களுக்கு முன்பு சில பிரச்சினைகளிலிருந்து விடுபட, நான் வெளிநாடு போக முயற்சித்தேன். அப்பொழுது ஒரு தங்கை கூறினாள், “பிரச்சினை உங்களுக்குள் இருந்தால் அது எங்கு சென்றாலும் உங்களுடன் வரும் என்று. அந்த வார்த்தைகள் என்னை சிந்திக்கவைத்தது. எனது வெளிநாட்டு பயண எண்ணத்தை கைவிட்டேன். தொடர்ந்து போராடி இறை அருளால் அந்த பிரச்சினைகளிலிருந்து வெளியேறினேன்.

நாடு சீரழிந்துள்ளது என்று வேதனையில் இருக்கும் இறைவனுடைய பிள்ளைகளுக்கு இறைவன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். 2நாளாகமம் 7:14ம் வசனத்தில் இறைவன் இப்படிச் சொல்கிறார்.

என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.