Archives: இறைவேதம்

புனித இறைவேதம் எம்மை வந்தடைந்த வரலாறு (4)

விலையேறப்பெற்றமுத்துக்கள்சீஷத்துவபாடம் – 4
 
புனிதவேதாகமம் (4)
 
(புனித இறைவேதம் எம்மைவந்தடைந்தவரலாறு)
 
இறைவன்தன்னுடையசித்தத்தைவித்தியாசமானவழிகளில்வெளிப்படுத்தினான்.
 
நீங்கள் வேதாகமத்தை வாசிக்கும்பொழுது, இறைவன் அவனுடைய செய்தியாளர்களின் உள்ளத்தை பல்வேறுப்பட்ட விதங்களில் அகத்தூண்டியதை கண்டு கொள்வீர்கள். அவன் இந்த செய்தியாளர்களை அவர்களுடைய மனத்திற்கு எந்தவித சிந்தனையுமற்ற நிலையில் வைத்து வெறுமனே அவன் சொல்வதை சொல்வதெழுதல் போன்று எழுதும்படி பாவிக்கவில்லை. அவன் அவனுடைய வெளிப்படுத்தல்களை, அவர்களுடைய சொந்த வார்த்தைகளில் எழுதும்படி அவர்களுடைய உள்ளத்தை அகத்தூண்டினான். இதைக் குறித்திருக்கும் சில வேதாகம வசனங்களை வாசித்து, இந்த கூற்றை புரிந்துக்கொள்ளுங்கள்.

புனித இறைவேதம் எம்மை வந்தடைந்த வரலாறு

விலையேறப்பெற்றமுத்துக்கள்சீஷத்துவபாடம் – 3
புனிதஇறைவேதம்  (3)
(புனிதஇறைவேதம்எம்மைவந்தடைந்தவரலாறு)
 யாதொருவர் ஒரு பொக்கிஷம் அடங்கிய பெட்டியை கண்டுபிடிக்கும் பொழுது தன் வெளித் தோற்றம் எவ்வாறு இருக்கின்றது என்று மாத்திரம் பார்த்தால் போதாது. அந்த பெட்டிக்குள்ளே எவ்விதமான பொக்கஷம் அடங்கியிருக்கின்றது என்பதை பார்க்க வேண்டுமானால், அவர் அந்தப் பெட்டியை திறக்க வேண்டும்.  புனித வேதாகமத்திற்கும் இது பொருந்தும். இவ்வளவு நேரம் நாம் இப் பொக்கிஷ பெட்டியின் வெளித் தோற்றத்தைப் பார்த்தோம். இப்பொழுது உங்களுக்காக அந்த பெட்டிக்குள் இருக்கும் பொக்கிஷங்களை நீங்கள் கண்ட டையும்படி நாங்கள் அதை திறக்கப்போகின்றோம்.  அதை கண்டடைவதற்கூடாக நீங்கள் வளமடைவீர்கள் என்பதை குறித்து நாங்கள் நிச்சய முடையவர்களாய் இருக்கின்றோம்.

இறைவேதம் என்றால் என்ன? பகுதி 2

 
விலையேறப்பெற்றமுத்துக்கள்சீஷத்துவபாடம்  2
 
புனிதவேதாகமம் (2)
 
(புனிதஇறைவேதம்ஒருநூலகம்: புதியஏற்பாடு)
       
 1. சரித்திரநூல்கள்:
 
·         மத்தேயுஇவர் ஈஸா அல் மஸீஹ் அவர்களின் பன்னிரெண்டு ஹவாரியூன்களில் (சீஷர்களில்) ஒருவராவார். இவா் தனது நூலை யகூதிகளுக்கு எழுதினா். பழைய ஏற்பாட்டின் முன் கூறுதலின்படி ஈஸா தான் நீங்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த அந்த மஸீஹ் என்றஉண்மையை தன் நற்செய்தி நூலின்மூலம் அவர்களுக்குத் தெளிவுப்படுத்தினார்.
 
·         மாற்கு இவா் ஈசாவின் பன்னிரெண்டுஹவாரியூன்களில் ஒருவரான பித்ரூஸ் இன்ஹவாரியூன் ஆவார். இவர் ஈசாவைப்பற்றியகாரியங்களை ஒரு திரட்டாய் திரட்டி, ஒழுங்குப்படுத்தி அன்றைய காலத்தில் ஆட்சியில்இருந்த ரோமர்களுக்கு நற்செய்தியாக எழுதினார்.

இறைவேதம் என்றால் என்ன? பகுதி 1.

அறிமுகம்
 
 
அன்பு சகோதர சகோதரிகளே,
 
புனித கிதாப்பாகிய (புத்தகம்) வேதாகம விசுவாச பாடத்திற்கு நாங்கள் உங்களை அன்புடன் வர வேற்கின்றோம். கி.பி 13ம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரபல்யமான ஒரு முஸ்லீம் கவிஞரான ஜாலாலுத்தீன் ரூமி என்பவர; இருட்டறையில் இருந்த யானையைப் பார்க்கச் சென்ற சில மனிதர்களை குறித்து ஒரு கதையைக் கூறினார்: “சில மனிதர்கள் அரேபிய தீபகற்பத்திற்கு ஒரு யானையை கொண்டு வந்திருந்தார்கள். இருட்டறையில் வைக்கப்பட்டிருந்த இந்த யானையை பார்ப்பதற்கு அநேக அராபியர்கள் சென்றனர். அந்த யானை வைக்கப்பட்டிருந்த அறை இருளாய் இருந்தப்படியினால் அங்கு சென்றவர்களால் அதை தெளிவாய் பார்க்க முடியவில்லை. தடவியே அறியக்கூடியதாய் இருந்தது. ஒருவர் யானையின் தும்பிக்கையை தடவிப்பார்த்துவிட்டு யானை ஒரு குழாய் எனும் முடிவுக்கு வந்தார். இன்னொருவர் அதன் காதை தொட்டுப்பார்த்துவிட்டு யானை ஒரு காற்றாடி என முடிவு செய்தார். வேறு சிலரும் அதன் வயிற்றை தடவிப் பார்த்துவிட்டு யானை ஒரு சுவர் என்றனர். இன்னும் சிலர் அதனுடைய காலை தொட்டுப்பார்த்துவிட்டு ‘அது ஒரு பெரிய மரம்’ என்றனர். இன்னும் சிலர் அதன் வாலை தொட்டுப்பார்த்துவிட்டு ‘யானை ஒரு கயிறு’ என்றனர். ஆனால், இங்கு நடந்தது என்னவென்றால், உண்மையாக யாரும் யானையை அது இருக்கும் வண்ணமாக பார்க்கவில்லை. மாறாக அதனுடைய சிறு சிறு பகுதிகளை மாத்திரமே பார்த்து அதற்கேற்ப முடிவு செய்தனர்.