Archives: கேள்வி பதில்

ஈஸா இறைவனா?

ஈஸா இறைவனா

பொதுவாக முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களுக்கு மறுப்பு சொல்லும் போது, “ஈஸா அல் மஸீஹ்வை மனிதனாக காட்டும் புதிய ஏற்பாட்டின் சில வசனங்களை எடுத்துக் காட்டி, இவைகளின் படி ஈஸா ஒரு மனிதன் தான், அவர் இறைவன் அல்ல” என்றுச் சொல்வார்கள்.

தன் இலக்கை தவறவிட்டுவிட்ட அம்பு போன்றது தான் முஸ்லிம்களின் இந்த வாதம். இங்கு ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், “ஈஸா அல் மஸீஹ் ஒரு மனிதனாகவும் இருக்கிறார்” என்று கிறிஸ்தவர்களும் நம்புகிறார்கள் என்பதாகும். கிறிஸ்தவர்களுக்கு முஸ்லிம்கள் ஒரு புதிய மற்றும் அறிய விஷயத்தை கண்டுபிடித்து சொல்லவில்லை. கிறிஸ்தவர்கள் ஏற்கனவே அறிந்திருக்கிற விஷயத்தைத் தான் அவர்கள் சொல்கிறார்கள். மேலும், முஸ்லிம்களின் இந்த வாதத்தில் உள்ள பிரச்சனை என்னவென்றால், இவர்கள் “பைபிளிலிருந்து தங்களுக்கு தேவையான வசனங்களைத் தனிமைப்படுத்தி மேற்கோள் காட்டுகிறார்கள்” என்பதாகும். ஆனால், ஈஸா அல் மஸீஹ்வைப் பற்றி கிறிஸ்தவர்களின் புரிந்துக் கொள்ளுதல் தான் சரியானது. பைபிளில் ஈஸா அல் மஸீஹ்வைக் குறித்துச் சொல்லப்பட்டுள்ள அனைத்து வசனங்களையும் ஒன்று சேர்த்து கிறிஸ்தவர்கள் பார்க்கிறார்கள். முஸ்லிம்களைப் போல சில வசனங்களை விட்டுவிட்டு பொருள் கொள்வதில்லை. ஈஸா அல் மஸீஹ்வை இறைவனாக காட்டும் வசனங்களையும், மனிதனாக காட்டும் வசனங்களையும் கிறிஸ்தவர்கள் பார்ப்பதினால், அவர்களின் புரிந்துக் கொள்ளுதலில் தவறு இருப்பதில்லை. “இதோ இவ்வசனங்கள் ஈஸா அல் மஸீஹ்வை மனிதனாக காட்டுகின்றன” என்று முஸ்லிம்கள் நம்மிடம் சொல்லும் போது, அவரைப் பற்றிய இறைத்தன்மையை வெளிப்படுத்தும் இதர வசனங்களோடு அவைகள் முரண்படுவதில்லை என்பதையும் புரிந்துக் கொள்ளவேண்டும். 

கிறிஸ்தவர்கள் நபிமார்களை அவமதிக்கிறார்களா?

  1. முஸ்லீம்கள் ஈஸா அல் மஸீஹின் பெயரை, முகமது நபியின் பெயரை, மற்ற நபிமார்களின் பெயரைச் சொல்லும்போது, (அலை) “அவர் மீது சாந்தி உண்டாகட்டும்” என்றுச் சொல்கிறார்கள், ஆனால் ஏன் கிறிஸ்தவர்கள் இப்படிச் சொல்லாமல் தீர்க்கதரிசிகளை அவமானப்படுத்துகின்றார்கள்?

இக்கேள்விக்கான பதிலை மூன்று வகையாக பிரித்துச் சொல்லலாம்:

  1. ஏன் கிறிஸ்தவர்கள் முகமது நபியின் பெயரைச் சொல்லும்போது “அவர் மீது சாந்தி உண்டாகட்டும்” என்றுச் சொல்வதில்லை.
  2. ஏன் கிறிஸ்தவர்கள் ஈஸா அல் மஸீஹின் பெயரைச் சொல்லும்போது (அலை) “அவர் மீது சாந்தி உண்டாகட்டும்” என்றுச் சொல்வதில்லை.
  3. ஏன் கிறிஸ்தவர்கள் மற்ற நபிமார்களின் பெயரைச் சொல்லும்போது (அலை) “அவர் மீது சாந்தி உண்டாகட்டும்” என்றுச் சொல்வதில்லை.

 

  1. ஏன் கிறிஸ்தவர்கள் முகமது நபியின் பெயரைச் சொல்லும்போதுஅவர் மீது சாந்தி உண்டாகட்டும்என்றுச் சொல்வதில்லை.

இதற்கான பதிலை நாம் தெரிந்துக்கொள்வதற்கு முன்பு, கிறிஸ்தவர்களின் நம்பிக்கை என்ன? இறைவேதம் என்ன சொல்கிறது என்று தெரிந்துக்கொள்ளவேண்டும். இறைவேதம் நமக்கு தெளிவாகச் சொல்கிறது. ஈஸா அல் மஸீஹ் தனக்கு பின்பு கள்ள (பொய் நபிமார்கள்) வருவார்கள் என்று தெளிவாக எச்சரித்துள்ளார்.

  1. ஈஸா அல் மஸீஹ் அவர்களுக்குப் பின்பு நிறைய பேர் தங்களை தீர்க்கதரிசிகள் (நபிகள்) என்று சொல்லிக்கொண்டு வருவார்கள், அவர்களை நம்பவேண்டாம்.

மத்தேயு 24:24

ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.

என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?

ஈஸா அல் மஸீஹ் கலிமதுல்லாஹ் என்றால், அவர் இறைவன் என்றால், “என் இறைவா! ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று அவர் ஏன் மன்றாடினார் என்பது எம்மில் பலரும் கேட்கின்ற ஒரு கேள்வி. இதனை ஆதாரம் காட்டி, புத்திஜீவிகள் என்று காட்டிக்கொள்ளும் பலர் தன்னையே காப்பாற்றிக்கொள்ள முடியாத ஒருவராயிருக்கையில், எப்படி மற்றவர்களைக் காப்பாற்றுவதற்காக தன் உயிரையே குர்பானாக கொடுத்தார் என்று தங்களை கேள்வி கேட்பதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

அல் கிதாப் எனும் இறைவேதம் வருடந்தோறும் மாற்றப்படுகிறது என்று பொய்க்குற்றச்சாட்டை முன்வைக்கும் அதே அறிஞர்கள், அல் கிதாபின் சத்திய போதனைகளுக்கு, என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்ற வசனம் அச்சுறுத்தலாக இருந்தால், ஏன் இன்னும் அதனை மாற்றாமல் அப்படியே வைத்துள்ளார்கள் என்று கொஞ்சமாவது சிந்தித்திருந்தால், அவர்களின் இரு குற்றச்சாட்டுக்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகிறதே என்று தங்களைக் குறித்துத் தாங்களே வெட்கப்பட்டிருப்பார்கள்.