Archives: பொதுவானவை

அல்லாஹ்வுக்கு ஏன் குர்பானியும் இரத்தமும் தேவைப்பட்டது?

நான் சிறுவனாக இருந்த போது கொண்டாடிய பக்ரீத் பண்டிகைகள் இன்னும் ஞாபகத்தில் பசுமையாக இருக்கிறது. பக்ரீத் பண்டிகையின் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே அப்பா ஒரு ஆட்டை வாங்கிவிடுவார். அந்த ஆட்டுக்கு தேவையான புல்லை நான் அதற்கு உண்ணக்கொடுப்பேன். பக்ரீத் பண்டிகையன்று, மசூதிக்குச் சென்று தொழுதுவிட்டு, வீடு திரும்பிவோம். ஆட்டை அறுப்பதற்கும், அதன் தோலை உரித்து கறி வெட்டுவதற்கும் ஆட்களை அப்பா அழைத்து வருவார்.

ஆடு அறுக்கப்படும் போது அதனை பார்க்கவேண்டாம் என்று பெரியவர்கள் எங்களை தடுப்பார்கள். ஆட்டு இறைச்சி மூன்று சம பகுதிகளாக பிரிக்கப்படும். ஒரு பங்கு சொந்தக்காரர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுக்கப்படும். இன்னொரு பங்கு ஏழை முஸ்லிம்களுக்கு. மூன்றாவது பங்கு எங்களுக்கு. நான்கு கறித்துண்டுகளை சின்ன பொட்டலங்களாக கட்டி, எங்கள் பகுதியில் இருக்கும் இதர முஸ்லிம்களின் வீடுகளுக்குச் சென்று கொடுத்துவருவோம். அடுத்த சில நாட்கள் எங்கள் வீட்டில் அசைவ சமையல் தான், காயவைத்த கபாப் வாசனை வீடு முழுக்க வீசும். இந்த நேரத்தில் அசைவ உணவை சாப்பிடாதவர்கள் வீட்டிற்கு வந்தால் அவ்வளவு தான் அவர்களின் கதை.  மாடியில் காயவைத்த கபாப் தூண்டுகளை மாலையில் கொண்டு வந்து பத்திரப்படுத்துவோம், மறுநாள் காலை மறுபடியும் காயவைப்போம். அடுத்த சில வாரங்கள், உணவு பறிமாறப்படும் போது, கபாப் துண்டுகள்,  அதிகமாக எங்கள் சாப்பாட்டில் காணப்படும்.

பக்ரீத் பண்டிகை

சரி விஷயத்துக்கு வருகிறேன். இன்னும் பத்து நாட்களில் பக்ரீத் பண்டிகை வருகிறது. பக்ரீத் பண்டிகைக்கு முன்பாக ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி முஸ்லிம்களோடு உரையாடலாம் என்று விரும்பி இந்த சிறிய தொடர் கட்டுரைகளை எழுதுகிறேன். இவைகள் பற்றி முஸ்லிம் சகோதரர்கள் தங்கள் விமர்சனங்களை முன்வைக்கலாம்.

கருப்பொருள்: கிறிஸ்தவம் பற்றி முஸ்லிம்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களில் மிகவும் முக்கியமானவைகள் இவைகள் தான்:

அ) ஒருவரின் சுமையை (பாவங்களை) இன்னொருவர் சுமக்கமுடியாது.

ஆ) உலக மக்களின் பாவங்கள் அனைத்தையும், இயேசுவின் மீது சுமத்தி, அவரை தண்டிப்பது என்பது அநியாயமாகும், இதனை இறைவன் ஒருபோதும் செய்யமாட்டான்.

இ) செய்யாத குற்றத்திற்காக ஒருவரை தண்டிப்பது தவறானதாகும்.

ஈ) இறைவன் பாவங்களை மன்னிக்கவேண்டுமென்றால், அவன் ஒரு வார்த்தையில் மன்னித்துவிடலாம். மனிதர்களை மன்னிக்க இறைவனுக்கு பலிகள் பரிகாரங்கள் தேவையில்லை. ஒரு குற்றவாளியின் குற்றத்தை எடுத்து நிரபராதியின் மீது சுமத்தி, அந்த குற்றவாளியை தண்டிக்காமல் இருப்பதும்,  ஆனால், அந்த நிரபராதியை தண்டிப்பதும்  அநீதி இல்லையா?

இப்படிப்பட்ட பல கேள்விகளை முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களிடம் கேட்பார்கள். இக்கேள்விகள் நியாயமானவைகளாக தெரிகின்றதல்லவா! குர்-ஆனும், ஹதீஸ்களும் இவைகள் பற்றி என்ன சொல்கின்றன என்பதை ஆய்வு செய்வது இத்தொடர் கட்டுரைகளின் நோக்கம் ஆகும்.  இந்த தற்போதைய கட்டுரையில் குர்-ஆனில் காணப்படும் பக்ரீத் பண்டிகை (ஈத் அல்-அதா) சம்மந்தப்பட்ட சில வசனங்களை மட்டும் ஆய்வு செய்து, சில கேள்விகளை முன்வைப்போம்.

இப்ராஹீம் தம் மகனை பலியிட முயன்ற நிகழ்ச்சி:

இந்த நிகழ்ச்சி எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். பைபிளில் ஆதியாகமம் 22ம் அத்தியாயத்தில் இதனை காணலாம். குர்-ஆன் 37ம் அத்தியாயத்திலிருந்து சில வசனங்களை படிப்போம்.

குர்-ஆன் 37:102-107

37:102. பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் – என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.” 37:103. ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது.

37:104. நாம் அவரை “யா இப்ராஹீம்!” என்றழைத்தோம்.

37:105. “திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம்.

37:106. “நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்.”

37:107. ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப்பகரமாக்கினோம்.(முஹம்மது ஜான் தமிழாக்கம்).

(ஆபிரகாம் பலியிட முன்வந்தது, ஈசாக்கையா, இஸ்மவேலையா என்பதைப் பற்றி இக்கட்டுரையில் ஆராயத்தேவையில்லை, பின் குறிப்பில்  கொடுக்கப்பட்ட கட்டுரைகளை படிக்கவும்).

அல்லாஹ்விற்கு ஏன் பலியும் இரத்தமும் தேவைப்பட்டது?

மேற்கண்ட வசனங்களை நன்றாக கவனியுங்கள். இப்ராஹீமின் தியாகத்தை, அல்லாஹ் மெச்சிக்கொள்கிறான். ஆனால், அதோடு நின்று விடாமல், ஒரு ஆட்டை ஆபிரகாமுக்கு காட்டி, அதை பலியிட சொல்கின்றான். குர்-ஆன் 37:107ம் வசனத்தை கவனியுங்கள், “நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம்”.   இந்த வசனத்தை மட்டும், இதர தமிழாக்கங்களிலும், ஆங்கிலத்திலும் பார்த்துவிட்டு, நம் கேள்விகளுக்குச் செல்வோம்.

அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:

37:107. ஆகவே, மகத்தானதொரு பலியை அவருக்கு பகரமாக்கினோம்.

இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்:

37:107. மேலும், ஒரு பெரும் பலியை ஈடாகக் கொடுத்து அக்குழந்தையை நாம்விடுவித்துக் கொண்டோம்.

பிஜே தமிழாக்கம்:

37: 107. பெரிய பலிப்பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம்.

Yusuf Ali: And We ransomed him with a momentous sacrifice:

Khalifa: We ransomed (Ismail) by substituting an animal sacrifice.

Palmer: And we ransomed him with a mighty victim;

இந்த வசனத்தை பார்க்கும் போது, கீழ்கண்ட கேள்விகள் எழுகின்றன:

1) ஆபிரகாமின் மகன் கொல்லப்படுவதற்கு முன்பு அல்லாஹ் அவனை காப்பாற்றிவிட்டான், இது நல்லது தான். ஆனால், பலியிட  குறிக்கப்பட்ட ஆபிரகாமின் மகனுக்கு பதிலாக ஒரு பலியை அல்லாஹ் ஏன் தயார் படுத்தவேண்டும்?

2) கொல்லப்படவேண்டியவனுக்கு பதிலாக, அந்த இடத்தில் ஏன் ஒரு ஆடு கொல்லப்படவேண்டும்?

3) அல்லாஹ் ஆபிரகாமை மெச்சிக்கொண்டுவிட்ட பிறகு, அவர்களை அப்படியே வீட்டிற்கு அனுப்பியிருக்கவேண்டியது தானே! ஏன் அந்த இடத்தில் ஒரு மிருகம் கொல்லப்படவேண்டும் என்று அல்லாஹ் விரும்பினான்?

4) அல்லாஹ் ஆபிரகாமின் மகனை காப்பாற்றுவதை முன்னமே திட்டமிட்டிருந்தான், அங்கு ஒரு ஆட்டை தயார் படுத்தி வைத்திருந்தது ஏன்? ஒரு ஆட்டின் பலி வேண்டும் என்று ஏன் அல்லாஹ் விரும்பினான்?

ஆபிரகாமின் மகனை விடுவிக்கவேண்டியது ஏன்?(Ransom)

போரில் பிடிப்பட்ட அடிமைகளை விடுவிப்பதற்காக, “மீட்பு பணம் அல்லது பிணைப்பணம்” என்றுச் சொல்லக்கூடிய பணத்தை கொடுத்து, அடிமைகளை விடுவிப்பார்கள். அது போல, ஒரு மகத்தான பலியைக் கொண்டு நாம் விடுவித்தோம் என்று அல்லாஹ் சொல்வது ஏன்?

1) IFT தமிழாக்கத்தில் “ஒரு பெரும் பலியை ஈடாகக் கொடுத்து அக்குழந்தையை நாம் விடுவித்துக் கொண்டோம்.” என்று விவரமாக விளக்கப்பட்டுள்ளது.

2) ஆபிரகாமின் மகன் எப்போது அடிமையானான்? யாருக்கு அடிமையானான்?

3) அவனை யாரிடமிருந்து ஆபிரகாம் விடுவித்தான்?

4) ஒருவேளை அல்லாஹ் மீட்பு பணம் (ஆடு) கொடுத்து விடுவித்தான் என்றுச் சொன்னால், யாரிடமிருந்து அல்லாஹ் விடுவித்தான்? அல்லாஹ்வை விட பெரியவன் யார் இருக்கின்றார்கள்? தனக்குத் தானே மீட்பு பலியைக் கொடுத்துக்கொண்டு, அக்குழந்தையை அல்லாஹ் மீட்டானா? இதனை எப்படி புரிந்துக்கொள்வது?

5) இரத்தம் சிந்தாமல் ஒருவர் மீட்கப்படமுடியாதா?

6) ஒருவரின் பாரம் ஒருவர் சுமக்கமுடியாது என்றுச் சொன்னால், ஏன் அந்த ஆடு அநியாயமாக ஆபிரகாமின் மகனுக்காக கொல்லப்படவேண்டும்? ஆடு நிரபராதி தானே! யாரோ ஒருவரை மீட்க இந்த ஆடு ஏன் சாகவேண்டும்?

7) ஆபிரகாமே, உன் தியாகத்தை நான் பார்த்துவிட்டேன், குழந்தையை கொல்லாதே, சந்தோஷமாக வீட்டுக்குப்போ என்றுச் சொல்வதை விட்டுவிட்டு, ஏன் அல்லாஹ் ஒரு மகத்தான பலியை அங்கு கொடுத்தான்?

8) ஒருவேளை, பலியில்லாமல் விடுதலை கிடைக்காது, இரத்தம் சிந்தப்படாமல் மன்னிப்பு இல்லை, தண்டனையிலிருந்து விடுதலை இல்லை என்பதைச் சொல்லவேண்டி, அல்லாஹ் இப்படி ஆட்டை பலியிடச் சொன்னானா?

முஸ்லிம்களே, குர்-ஆனில் ஒருவரின் பாரத்தை ஒருவர் சுமக்கமுடியாது என்றுச் சொல்லும் 6:164, 17:13-15 போன்ற வசனங்கள் உண்டு என்று எனக்கு எடுத்துக் காட்டாதீர்கள்! அவைகள் பற்றி அடுத்தடுத்த தொடர்களில் பார்ப்போம். இந்த கட்டுரையை பொருத்தமட்டில், குர்-ஆன் 37:107ல், ஏன் அல்லாஹ் ஒரு ஆட்டை பலியிட அனுமதித்தான்? அதன் பின்னனி என்ன? இப்படி பலியிட்டு இரத்தம் சிந்துவதினால் அவனுக்கு (அல்லாஹ்விற்கு) என்ன நன்மை? அல்லது ஆபிரகாமின் மகனுக்கு என்ன லாபம்? என்பதை மட்டுமே விளக்குங்கள்.

அல்லாஹ் ஆபிரகாமுக்கு மகனை பலியிடும்படி கனவை கொடுத்தான், அவனே அதனை தடுத்தும்விட்டான், அவ்வளவு தான். இந்த இடத்தில் பலி எங்கே வந்தது? “மீட்புப்பணம்”(Ransom) ஏன் வந்தது? ஏன் இரத்தம் சிந்தப்படவேண்டும்?

ஆபிரகாம் கத்தியை ஓங்கிவிட்டார், எனவே அதற்கு இரத்தத்தை காட்டாமல் கீழே வைக்கக்கூடாது என்று சில முஸ்லிம்கள் சொல்லக்கூடும். தமிழ் படங்களில் ஹீரோ “நான் மேலே எடுத்த கத்திக்கு இரத்தத்தை காட்டாமல் கீழே வைக்கமாட்டேன்” என்றுச் சொல்வது போல, பஞ்ச் வசனம் சொல்லவேண்டாம். இது மிகவும் முக்கியமான விஷயம், எந்த ஒரு காரணமும் இல்லாமல், அல்லாஹ் பலிக்காக ஆட்டை கொடுத்து, ஆபிரகாமின் மகனை நான் மீட்டுக்கொண்டேன் என்று சொல்லமாட்டான்.

ஆட்டை அறுக்கும் படி அல்லாஹ் சொல்லவில்லை, ஆபிரகாம் சுயமாக செய்தார் என்று சொல்லவருகிறீர்களா? குர்-ஆன் 37:107ம் வசனத்தை நன்றாக படியுங்கள், அல்லாஹ் சுயமாகவே பலிக்காக ஒரு ஆட்டை கொடுத்தானாம், அதுவும் அது மகத்தான ஒரு பலியாம்!

முஸ்லிம்களில் சிலர், அந்த ஆடு, அல்லாஹ்வின் சொர்க்கத்தில் பல (40) ஆண்டுகள் மேய்ந்த ஆடு என்றும், அதனைத் தான் அக்குழந்தையை மீட்க அல்லாஹ் கொடுத்தான் என்றும் சொல்வார்கள். அது சொர்க்கத்தின் ஆடோ, பூமியின் ஆடோ! அது பிரச்சனை அல்ல!  கேள்வி என்னவென்றால், ஏன் அந்த ஆடு மரிக்கவேண்டும்? ஏன் அதன் இரத்தம் சிந்தப்படவேண்டும் என்பது தான்?

இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல விரும்பும் முஸ்லிம்கள், குர்-ஆன் 37:107ம் வசனத்தை ஆய்வு செய்து பதில் சொல்லுங்கள்.

அடுத்த தொடரில் சந்திக்கிறேன்…

அடிக்குறிப்புக்கள் (பயனுள்ள கட்டுரைகள்):

(நன்றி ஈஸா குர்ஆன்)

சிருஷ்டி கர்த்தாவும் அல்லாஹ்வும்


God-is-not-Allah

கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் என்ற இவ்விரு மார்க்கங்களை பின்பற்றுபவர்கள் சொல்லும் பொதுவான ஒரு விஷயம், “வானத்தையும் பூமியையும் படைத்த இறைவனை நாங்கள் தொழுதுக்கொள்கிறோம்” என்பதாகும். இது ஒரு அடிப்படை விஷயம் என்பதால், இதனை அதிகமாக விளக்கத்தேவையில்லை. இறைவேதமாம் பைபிள் தன் முதல் வசனத்தை தேவன் வானத்தையும் பூமியையும் படைத்த வர்ணனையோடு துவங்குகிறது (ஆதியாகமம் 1:1). இன்னும் பல இடங்களில் பைபிளின் இறைவன் தம்முடைய உருவாக்கும் வல்லமையை பறைசாற்றுவதை காணமுடியும் (பார்க்க ஏசாயா 44:24 & யோபு 38:4-6). இதே போல, குர்-ஆனிலும் அனேக இடங்களில் அல்லாஹ் வானத்தையும் பூமியையும் படைத்தவர் என்று சொல்லப்பட்டுள்ளது.

குர்ஆன் 6:73. அவன் தான் வானங்களையும் பூமியையும் உண்மையாகவே படைத்தான்; அவன்ஆகுக!” என்று சொல்லும் நாளில், அது (உடனே) ஆகிவிடும். அவனுடைய வாக்கு உண்மையானது; எக்காளம் (ஸூர்) ஊதப்படும் நாளில், ஆட்சி (அதிகாரம்) அவனுடையதாகவே இருக்கும்; அவன் மறைவானவற்றையும், பகிரங்கமானவற்றையும் அறிந்தவனாக இருக்கிறான்; அவனே பூரண ஞானமுடையோன்; (யாவற்றையும்) நன்கறிந்தோன்

யாரை பின்பற்றப்போகிறீர்கள்?

follow me

முந்தைய காலங்களை விட, தற்காலத்தில் விலாசம் சரியாக தெரியாத ஊர்களுக்குச் செல்வது மிகவும் சுலபமாகும். புதிய சாதனங்களாகிய ஜிபிஎஸ் (GPS) மற்றும் கூகுள் மேப் (Google Map) போன்றவை நம்முடைய விலாசதேடலை சுலபமாக்கிவிட்டன. பழங்காலங்களில், நாம் சரியான விலாசத்தை சென்றடையவேண்டுமென்றால், அவ்வழிகளை அறிந்து வைத்திருக்கின்ற நபரின் உதவியை நாடவேண்டும்.

அதுபோல்தான் சுவனபதியை அடையவேண்டும் என்றால் அதற்கான வழியை அறிந்தவருடைய உதவியைதான் நாடவேண்டும் என்பது நான் சொல்லித்தான் நீங்கள் தெரியவேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த கட்டுரையில் ஈஸா அல் மஸீஹ் மற்றும் முஹமது நபியவர்களுடைய வாழ்க்கையின் கடைசி நாட்களை நாம் அவதானித்து இருவரில் யார் சுவனம் செல்லும் வழியை நமக்குக் காட்ட தகுதியானவர் என்பதை ஆராய்வோம்.

இன்ஜீலில் ஈஸா அல் மஸீஹ்வின் இறைத்தன்மை

இஸ்லாமியர்கள் இன்ஜீல் என்று அழைக்கும் சுவிசேஷ கிதாபுகளில் (மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்) ஈஸா அல் மஸீஹ் இறைவன் என்பதற்கு சான்றுகள் இல்லை என்று பகிரங்கமாக இஸ்லாமிய அறிஞர்கள் பயான் செய்துகொண்டிருக்கிறார்கள்.

உண்மையாக சத்தியத்தை தேடும் இஸ்லாமியர் உண்மையை புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக இந்த சிறிய கட்டுரையில் அவர்கள் குற்றச்சாட்டுகள் உண்மையா என்பதை ஆராய்வோம். ஈஸா அல் மஸீஹ் தன்னுடைய இறைத்தன்மையை வெளிப்படுத்திய வசனங்களையும் ஆராய்வோம்.

உன்னதப்பாட்டை குறித்த முன்னால் இஸ்லாமியனின் கருத்து

(முகப்புத்தகத்திலிருந்து)song of solomon

உன்னதப்பாட்டை குறித்து முன்னால் இஸ்லாமியனின் கருத்து

அல் கிதாபில் (பைபிளில்) உன்னதபாடல் என்ற ஒரு கிதாப் உள்ளது. அது ஆபாச புத்தகம் என்று நவீனகால இஸ்லாமிய அறிஞர்கள் (அவர்கள் காபிர்கள் என்று 99 வீதமான இந்திய இஸ்லாமியர் பத்வா கொடுத்துள்ளார்கள்) என்று தங்களை காட்டிக்கொள்ளும் சிலர் முகபுத்தகங்களிலும் இணையத்தளங்களிலும், விவாதங்களிலும் ஜும்மா பயான்களிலும் ஆபாசமாக பயான் செய்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆபாசாமாக பேசினால்தான் அநேகர் விரும்பி தங்கள் பயான்களை கேட்பார்கள் என்பது அவர்கள் விரும்பமாக இருக்கிறது. அதற்கு ஆதாரமாக முஹமது நபி மூன்று சந்தர்ப்பங்களில் பொய் சொல்ல அனுமதித்தார். அதில் ஒன்று தன் மனைவியிடம் பொய் சொல்ல முஹமது நபி அனுமதி கொடுத்திருக்கிறார். ஆகவே மனைவியை பொய்யாக வர்ணித்து அவளை ஏமாற்றலாம். இரண்டாவது இருவருக்கிடையில் சண்டை நடக்கும் போது அவர்களை பொய் சொல்லி சமாதானம் செய்யலாம். மூன்றாவது போர்களத்தில் பொய் சொல்லலாம்.
மனைவியை பொய்யாக வர்ணிக்கவேண்டும் என்று இந்த அறிஞர்கள் விளக்கம் கொடுப்பார்கள். ஆனால் தூய இறைவன் தன் உம்மத்தை தனது மனைவிபோல் நேசிக்கிறவர். அதாவது அவர் தனது சமுதாயத்தை நேசிப்பது போல், ஒவ்வொருவருக்கும் தன் மனைவியை நேசிக்குமாறு கூறுகிறார். ஒரு கணவன் எப்படி தன் மனைவிக்கு பொய் சொல்லாமல் உண்மையாக அவளை நேசிக்கவேண்டும் என்பதை உன்னதபாடல் என்ற கிதாபுக்கூடாக தெளிவு படுத்துகிறார்.

இப்பொழுது அந்த அறிஞர்கள் கேட்பார்கள் “ அறையில் செய்யவேண்டிய காரியத்தை இப்படி பகிரங்கமாக பேசுவது இறைவேதமா” என்று. இப்படிச் சொல்லும் அறிஞர்கள் தங்கள் மனைவிமாரை அழைத்துச்சென்று ஆண் வைத்தியரிடம் மறைவான வியாதி ஒன்றுக்காக மருத்துவம் பார்க்கவேண்டி ஏற்பட்டால், மூன்றாவது நபர் அன்னிய ஆடவனிடம் அதைப்பற்றி பேசியும், காட்டியும்தானே ஆகவேண்டும்??
இப்பொழுது அது ஆபாசம் என்று யாராவது வர்ணித்தால் இந்த அறிஞர்கள் எப்படியான பதிலை கொடுப்பார்கள்??

இறைவனுக்கே ஆபாசம் கற்பிக்கும் இந்த அறிஞர்களை நம்பி அவர்களின் அறியாமை கருத்துக்களை ஷேர் செய்யும் வாலிபகூட்டத்தின் கண்கள் திறக்கப்பட நாம் துஆச் செய்ய கடமைப்பட்டுள்ளோம்.

அந்த அறிஞர்கள் போர்களம் என்பதை விவாதக்களங்களாகவும் பயான் மேடைகளாகவும் தங்களுக்குவேண்டிய வியாக்கியானம் செய்துகொண்டு பொய்களையும் புறட்டுகளையும் பரப்பிக்கொண்டு தமிழ் பேசும் இஸ்லாமிய வாலிபர்களை நரகத்துக்கு அழைத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த வாலிபர்களை காப்பாற்ற இறைவனிடம் மன்றாடுவோம். எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கும் நேர்வழிகாட்ட போதுமானவர்.

இறைவனின் முகத்தைத் தேடுகிறீர்களா? அல்லது கரங்களை மட்டும் பார்க்கின்றீர்களா?

நாளாகமம் 7 14

“நாடு இப்படியே போச்சினா நம்ம பசங்கள்ட எதிர்காலம் என்னாவது!”

“இந்த நாட்டுல தொடர்ந்து வாழ்ந்தா நம்ம குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். US போற வழிய தேடணும்”

இப்படியான கருத்துக்கள் எமது சமுதாயத்தில் அடிக்கடி கேட்கக் கூடியதாகவுள்ளது. எதற்கு எடுத்தாலும் நாட்டையும் நாட்டை ஆள்கிறவர்களையும் குறை சொல்லிக்கொண்டே இருக்கிறோம். இப்படி குறை சொல்லி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்த பலர், கலாச்சாரப் பிரச்சினைகளால் பிள்ளைகளை அங்கேயே விட்டுவிட்டு நாடு திரும்பியவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களிடம் “ஏன் திரும்ப வந்துவிட்டீகள் என்று கேட்டால், “அந்த கலாச்சாரம் நமக்கு ஒத்துவராது, என் பையனையே எனக்கு திட்ட முடியல, உடனேயே அவன் பொலிஸுக்கு போன் செய்கிறான் என்று குழந்தைகள் தங்கள் கட்டுப்பாட்டை மீறிவிட்ட வேதனையில் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.

பல வருடங்களுக்கு முன்பு சில பிரச்சினைகளிலிருந்து விடுபட, நான் வெளிநாடு போக முயற்சித்தேன். அப்பொழுது ஒரு தங்கை கூறினாள், “பிரச்சினை உங்களுக்குள் இருந்தால் அது எங்கு சென்றாலும் உங்களுடன் வரும் என்று. அந்த வார்த்தைகள் என்னை சிந்திக்கவைத்தது. எனது வெளிநாட்டு பயண எண்ணத்தை கைவிட்டேன். தொடர்ந்து போராடி இறை அருளால் அந்த பிரச்சினைகளிலிருந்து வெளியேறினேன்.

நாடு சீரழிந்துள்ளது என்று வேதனையில் இருக்கும் இறைவனுடைய பிள்ளைகளுக்கு இறைவன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். 2நாளாகமம் 7:14ம் வசனத்தில் இறைவன் இப்படிச் சொல்கிறார்.

என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.

ஏன் குர்-ஆனை அரபியில் மட்டும் படிக்கவேண்டும்?

[இரவு மணி 8, எல்லாரும் சாப்பிட்டாகிவிட்டது, அப்துல்லா கொஞ்சநேரம் தன் வீட்டு திண்ணையில் உட்கார வேளியே வந்தான், தன் நண்பன் அப்ரஹாம் வீட்டுபக்கம் திரும்பி பார்த்தான், அவனும் தன் திண்ணையில் உட்கார்ந்து இருந்தான். இருவரும் ஒரே தெருவில் குடியிருக்கிறார்கள். அப்ரஹாமும் இவனைப் பார்த்தான், அப்ரஹாம் கையசைக்க, அப்துல்லா அவனைப்பார்க்க சென்றான்]

அப்துல்லா: என்னடா சாப்பிட்டாச்சா?

அப்ரஹாம்: இப்போ தான் முடிஞ்சுது, நீ சாப்பிட்டாயா?

அப்துல்லா: சாப்பிட்டேன். நான் கொடுத்த குர்-ஆனை படிச்சியா? இன்னிக்கு ஆபிஸ்லே கொஞ்ச நேரம் ஓய்வு கெடச்சது. அப்போ நீ குடுத்த புதிய ஏற்பாட்டை படிச்சேன். முதல் இரண்டு பக்கம் படிக்கிறதுக்குள்ளே, போதும் போதும் என ஆயிடுச்சி.

அப்ரஹாம்: [சிரிக்கிறான்] இனிமேல் தான் நீ தமிழை முழுசா கத்துக்கோ போறே.

அப்துல்லா: நீ மட்டும் என்னவாம். சுத்தமா ஒரு முஸ்லீம் பெயரைக் கூட உன்னால் சரியாக உச்சரிக்க முடியாது.

அப்ரஹாம்: சரி விடு, நீயாவது எனக்கு சொல்லக்கூடாது. நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? குர்-ஆன்லே முதல் பக்கம் திருப்புறேன், முதல் அதிகாரம் வரும் என்று பார்த்தா..! இன்டக்ஸ் வருது! யோசிச்சி பாத்ததிலே, அப்பரம் தான் புரிஞ்சுது, குர்-ஆனை இடது பக்கத்திலிருந்து அல்ல, வலது பக்கமாக படிக்கனும் என்று. எனக்கு நீ இங்லீஸ் மட்டும் இருக்கிற குர்-ஆன் குடுக்கக்கூடாது? ஏன்? அரபி/ஆங்கிலம் இருக்கிற குர்-ஆனை கொடுத்த.

அப்துல்லா: இப்போ என்கிட்டே இருக்கிறது அந்த குர்-ஆன் தான், அதுவும் எங்க சித்தப்பா, மக்காவிற்கு ஹஜ்ஜிற்கு போகும் போது அது குடுத்தாங்கலாம். வேறே இங்லீஸ் குர்-ஆன் வாங்கிக்கிலாம் விடு.

அப்ரஹாம்: சரி, என் கேள்விக்கு பதில் சொல்லு, சொல்லலே உன்னை விடமாட்டேன்.

1. ஏன் நீங்க எப்போதும் அரபியிலேயே குர்-ஆனை படிக்கிறீங்க?

2. புரியாத மொழியிலே நாம் படிச்சா, அல்லா சொன்ன செய்திகள் உங்களுக்கு எப்படி தெரியவரும்?

3. அல்லாவிற்கு அரபி தவிர வேறு மொழி தெரியாதா?

அப்துல்லா: உன் முதல் கேள்விக்கு பதில் சொல்றேன் கேளு. குர்-ஆனை எந்த மொழியிலேயாவது நாம் படிக்கலாம். ஆனால் அரபியிலே படித்தால் தான், அதிக நன்மைகள் வரும் என்று எங்க இமாம்கள், பெரியவங்க சொல்றாங்க.

அப்ரஹாம்: ஒரு வசனத்தின் பொருள் புரியாமல், பலமுறை படித்தாலும் அதனால் என்ன நன்மை சொல்லு? உதாரணத்திற்கு, நாம் எந்த பொருள் வாங்கினாலும், அதனோடுகூட ஒரு சின்ன புத்தகம் கொடுப்பார்கள். அந்த பொருளை எப்படி பயன்படுத்தவேண்டும், அது ரிப்பேர் ஆகிவிட்டால் எப்படி சரிசெய்யவேண்டும் போன்ற விவரங்கள் பல மொழிகளில் கொடுக்கப்பட்டிருக்கும். நாம் தமிழில் அல்லது நமக்கு தெரிந்த மொழியில் அந்த விவரங்களை படிப்போம், அப்பொருளை எப்படி பயன்படுத்தவேண்டும்  என்று தெரிந்துக் கொள்வோம்.

இதேபோலத் தானே வேதங்களும் பயன்படுகின்றன, நாம் எப்படி வாழவேண்டும், எப்படி சமுதாயத்தில் நடந்துக்கொள்ளவேண்டும் போன்றவற்றை நாம் கற்றுக்கொள்கிறோம்.

அப்துல்லா: இதற்காகத்தானே நாங்கள் மசூதிற்கு செல்கிறோம். அங்கு சொல்லப்படும் செய்திகளை நம்முடைய மொழியில் கேட்கிறோம். குர்-ஆனில் சொல்லப்பட்டதை அவர்கள் விளக்கிச் சொல்கிறார்கள். அறிஞர்கள் எழுதிய இஸ்லாமிய புத்தகங்களை படிப்போம்.

அப்ரஹாம்: அவர்கள் சொல்வதெல்லாம் சரியானது என்று அவர்கள் செய்திகளை சரிபார்ப்பது யார்? ஒவ்வொரு மனிதனும் தான் எதை நம்புகிறானோ, அதையே மற்றவர்களுக்குச் சொல்லுவான். உதாரணத்திற்கு ஒரு இமாம் ஜிஹாதில் அதிக கவனம் செலுத்துகிறவராக இருந்தால், அவர்களுடைய பேச்சு, செய்திகள் எல்லாம் அதைப்பற்றியே இருக்கும். வேறு ஒரு இமாம் தான் சமுதாயத்தில் சேவை செய்வதில் விருப்பமுடையவராக இருந்தால், அவருடைய எல்லா செய்திகளும், அதைச்சுற்றியே இருக்கும்.

இதில் பலியாவது யார் என்றால், இந்த செய்திகளை கேட்பவர்கள் தான். நாம் இப்போது இவைகளை செய்திகளில் பார்க்கிறோம். எல்லா இஸ்லாம் தீவிரவாதிகளும் உருவாவது மசூதியிலோ அல்லது மதரசாவிலோ? ஆனால் இங்கு இருக்கிற இஸ்லாம் அறிஞர்கள் “தீவிரவாதிகள் தவறு செய்கிறார்கள். குர்-ஆனை அவர்கள் தவறாக புரிந்துக்கொன்டார்கள்” என்று சொல்கிறார்கள். பழியை தீவிரவாதிகள் மீது போடுகிறார்கள்.

அப்துல்லா: நீ சொல்வதும் சரி தான். இஸ்லாம் மட்டுமல்ல எந்த மதமானாலும், கெட்டவர்களால் அது ஆளப்படும்போது, அதை சரி பார்த்து கேள்விகேட்டு, திருத்த அனுமதி மறுக்கப்படும்போது, உண்மையாகவே நன்மையை விட, தீமை தான் அதிகமாக நடக்கும். மதம் என்பது கத்தியைப் போன்றது. அது யாரிடம் உள்ளதோ, அவர்களைப் பொருத்தே அதன் பயன்பாடும் இருக்கும்.

உன்னுடைய இரண்டாவது கேள்வியும், முதல் கேள்வியும் ஒரேமாதிரி தான். நான் மூன்றாவது கேள்விக்கு பதில் சொல்கிறேன். இறைவனுக்கு மொழி என்பது ஒரு பிரச்சனையில்லை. எனவே அல்லாவிற்கு எல்லா மொழிகளும் தெரியும். எந்த மொழியில் நாம் பேசினாலும் அவனுக்குப் புரியும்.

அப்ரஹாம்: அப்படியானால் இதற்கு பதில் சொல்லு, ஒருவன் இஸ்லாமில் வருகிறான் என்று வைத்துக்கொள், அவன் தன் சொந்த மொழியில், அல்லாவிடம் நமாஜ் (தொழுகை) செய்யலாமா? நமாஜ் செய்யும்போது சொல்லப்படும் கலிமாக்கள் ( சூராக்கள், வசங்கள்) தன் தாய் மொழியில் சொல்ல அவனுக்கு அனுமதி உண்டா? அல்லது அவன் அரபியில் மட்டும் தான் தொழவேண்டுமா?

அப்துல்லா: அவன் தன் சொந்த பிரச்சனைகளுக்காக வேண்டிக்கொள்ளும்போது வேண்டுமானால் தன் தாய் மொழியில் வேண்டிக்கொள்ளலாம். ஆனால் தினமும் 5 வேளை தொழுவது மட்டும் அரபியில் மட்டும் தான் இருக்கவேண்டும்.

அப்ரஹாம்: ஏன்?

அப்துல்லா: குர்-ஆன் அரபியில் இறக்கப்பட்டது, அதனால் நாம் அரபியிலேயே தொழவேண்டும். மற்ற மொழியில் தொழுதால் அதன் தனித்தன்மை, இலக்கிய நடை பாதிக்கப்படும்.

அப்ரஹாம்: பொருள் முக்கியமா? இலக்கிய நடை முக்கியமா? பைபிள் எபிரேய, மற்றும் கிரேக்க மொழியில் எழுதப்பட்டாலும், “ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தை காட்டு”, “உன்னை பகைக்கிறவர்களுக்காக ஜெபம் செய்” போன்ற வசனங்கள், நம் தாய் மொழியில் படித்தால் தான் பிரயோஜனமே தவிர, இலக்கிய நடைக்காக நாம் கிரேக்க மொழியில் படிக்க முடியாது. அப்படி படித்தாலும் ஒரு நன்மையுமில்லை.

அப்துல்லா: சரி உனக்காகவாவது நான் இனிமேல் தமிழிலோ அல்லது இங்லீஸிலோ குர்-ஆன் படிப்பேன். சரியா? அடுத்த முறை நான் நிறைய விஷயங்கள் பைபிள் பற்றி கத்துகிட்டு வந்து, நான் கேள்வி கேட்கிறேன். நீ பதில் சொல்லு.

அப்ரஹாம்: எனக்காக படிக்க வேண்டாம், உனக்காக படி, குர்-ஆனில் என்ன இருக்கு? அல்லா என்ன சொல்றாறு? என்று தெரிஞ்சிக்கோ.

அப்துல்லா: சரி நான் வருகிறேன், மறுபடியும் பார்க்கலாம். அஸ்ஸலாமு அலைக்கும்.

அப்ரஹாம்: “வாஅலைக்கும் ஸலாம்” அரபியில் சொல்லிட்டேன் மன்னிக்கனும்,இதோ தமிழ் “உன் மீதும் சாந்தி உண்டாகட்டும்”

(நன்றி ஈஸா குர்-ஆன்)

சிலுவை குர்பான் மறுதலிப்பு! – இஸ்லாமியரின் இரட்சிப்பு இழப்பு!

ஆசிரியர்: அஸ்கர்

‘ஈஸாவே! நான் உம்மைக் கைப்பற்றுபவனாகவும், என்னளவில் உம்மை உயர்த்துபவனாகவும், (என்னை) மறுப்போரிடமிருந்து உம்மைத் தூய்மைப்படுத்துபவனாகவும், உம்மைப் பின்பற்றுவோரை (என்னை) மறுப்போரை விட கியாமத் நாள் வரை மேல் நிலையில் வைப்பவனாகவும்  இருக்கிறேன். பின்னர் என்னிடமே உங்களின் திரும்புதல் உள்ளது. (ஸூரா 3:55 பி ஜைனுல் ஆபிதீன் தமிழாக்கம்)

முன்னுரை: 

ஈஸ்டர் பெருநாள் இறைவேதம் குறிப்பிடுவது போல, ஈஸா அல் மஸீஹ்வைப் பின்பற்றும் எவருக்கும் மிக முக்கியமான ஒரு திருநாளாகும். இந்த பண்டிகையின்போது, மஸீஹ் ஆகிய ஈஸா சிலுவையில் குர்பானியாகி மரித்த சம்பவங்களை நினைவுகூர்வது மிக முக்கியமானதாக இருந்து வருகிறது. 1 கொரிந்தியர் 15:1-20 சொல்வது போல, இதுவே ஈஸ்டர் திருநாளின் மையப் பொருளாக இருக்கிறது.

அன்றியும், சகோதரரே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தை மறுபடியும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்; நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு, அதிலே நிலைத்திருக்கிறீர்கள்…கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து,  கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்.  அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார்; அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள், …கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா…கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்… கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.

அல்லாஹ்வின் அன்பு

அகிலத்தையும் படைத்தவனே றப்புல் ஆலமீன்

அன்பு கொண்டு ஆழ்பவனே றப்புல் ஆலமீன்

துன்ப துயரம் போக்க வல்ல தூய நாயனே!

துயர் நீக்கி காக்க வல்ல எங்கள் ரஹ்மானே!

 

உம்மத் உந்தன் வழியை மறந்து தூரப் போகையில்

மனம் அழுது மறை வழியின் மேன்மை காட்டினாய்

மந்தையென அடிமையாக வாழ்ந்த மனிதர்க்கு

தௌராத் வேதம் மூஸா வழி நீயும் கொடுத்தாய்

 

மக்கள் உந்தன் மேன்மை வழி தொடர்ந்து போகையில்

மாறி வந்த சந்ததியோ வழி மாறிப் போயினர்

மேன்மை வாழ்வை இழந்து தடுமாறி நிற்கையில்

ஸபூர் வேதம் தாவூத் வழி நீயும் கொடுத்தாய்

 

கொழுத்துப் போன இருதயங்கள் கொடுமை செய்தது

கொடிய வழியில் இறையை மறந்து பாவம் செய்தது

அரிய வழியை இழந்து உம்மத் அல்லல் படுகையில்

அறைகூவும் இறைதூதர்கள் தொடர்ந்து அனுப்பினாய்

 

இன்ஜீல் வேதம் இறைவன் வகுத்த வழியைச் சொன்னது

ஈஸா மஸீஹின் தியாக வாழ்வு புது வழியைத் திறந்தது

யாரும் காணா அருட்கொடையாம் அல்லாஹ்வின் அன்பையே

அகிலம் காண உன்னைக் கொடுத்தாய் ஈஸா மஸீஹே!

 

போதை பொருளும் மதுபானமும்

tuticorin-boys

இஸ்லாமிய நாடுகளில் அநேக வாலிப யுவதிகள் போதை போருட்களுக்கும் மதுபானத்துக்கும் அடிமையாகி வாழ்கிறார்கள். இஸ்லாம் இவற்றை தடைசெய்துள்ளது. ஆனாலும் 100 வீதம் இஸ்லாமியர் வாழும் நாடுகளில் அநேக வாலிப யுவதிகள் போதை பொருளுக்கு அடிமையாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

 

போலத் தனது இளவயதில் தன் தந்தை எப்படி குடி போதையால் தன் சொத்துக்ளையெல்லாம் அழித்தார் என்பதை நன்றாக அவதானித்து, தன் வாழ்வில் தான் அப்படியாகிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.

 

ஒரு வாலிப மருத்துவனாக பணியாற்றிய அவனை சக ஊழியர்களின் வற்புறுத்துதலினால் ஒரு கப் விஸ்கி பருகினான். நாலடைவில் அவனை அறியாமலேயே மதுபானம் இல்லாமல் அவனால் வேலையில் ஆர்வம் காட்ட முடியவில்லை.

 

சிறிது காலத்தில் தன் வேலையை இழக்கவேண்டி ஏற்பட்டது. குடும்பம் நடுவீதிக்கு வந்தது. தன் தந்தையை விடவும் போலத் மோசமான நிலைமைக்கு வந்துவிட்டான்.

 

அவன் மனைவிக்கு கிறிஸ்த ஊழியர்களின் தொடர்ப்பு கிடைத்தது. உண்மை கிறிஸ்தவர்கள் அடிமைத்தனத் திலும் நெருக்கத்திலும் உள்ளவர்களை ஆதரித்து உதவிகள் செய்து அந்த அடிமைத்தனத்திலிருந்து வெளியேற உதவுவார்கள் என்பதை அவள் அறிந்து, அப்படி சிகிச்சை கொடுக்கும் ஒரு கிறிஸ்த வீட்டுக்கு தன் கணவரை அழைத்துச் சென்றாள். இப்பொழுது போலத் விடுதலையின் பாதையில் இருக்கிறான்.

 

துஆ

 

 1. போலத் போன்ற இஸ்லாமிய வாலிபர்கள் கிறிஸ்துவின் விடுதலையை நோக்கி செல்லும் பாதையில் நின்று தங்கள் பயணத்தை ஆரம்பித்துள்ளார்களுக்காக துஆ செய்வோம்.
 2. போதைக்கு அடிமையான வாலிபர்கள் இருக்கும் இஸ்லாமிய குடும்பங்களுக்காக துஆ செய்வோம்.
 3. போதை பொருளுக்கு அடிமையானவர்கள் மத்தியில் ஊழியம் செய்யும் தேவ மனிதர்களுக்காகவும் அவர்கள் தேவைகளை இறைவன் சந்திக்கவேண்டும் என்றும் துஆ செய்வோம்.

பெரேலி முஸ்லீம்களுக்காக துஆ செய்வோம்.

20_-Bareilly-Jn-Railway-station

பெரேலி நகரமானது உத்தரா பிரதேசத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் ஒரு நகரமாகும். ஏழு ஆறுகள் அங்கே உண்டு. ஆனாலும் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதில்லை. வாலிபர்களை தொழில் ரீதியாக கவர்ந்து ஈர்க்கும் இந்த பெரேலியில் முஸ்லீம்கள் அநேகமாக தங்கள் சொந்த வியாபாரத்தில் ஈடுபடுகின்றார்கள்.

 

இங்கு வசிக்கும் 35 வீதமான முஸ்லீம்களின் குடியிருப்பு நகர மத்தியில் அமைந்து, அவர்களின் வளர்ச்சியும் அதிகரிக்க, இந்துக்களின் குடியிருப்புக்கள் நகரத்துக்கு வெளியாக அமைந்துவிட்டது. இதனால் இனவாத குழுக்களிடையே பிளவுகள் அதிகரித்து, அடிக்கடி மோதல்கள் நடந்து வருகிறது. இஸ்லாமிய இயக்கங்கள் மத்தியிலும் மத ரீதியான சண்டைகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

துஆ

 • பெரேலி முஸ்லீம்கள் மத்தியில் ஊழியம் செய்ய அநேக கிறிஸ்தவர்கள் இறை தரிசனத்தை பெற துஆ செய்வோம்.
 • தற்பொழுது ஊழியம் செய்து கொண்டிருக்கிறவர்களின் பாதுகாப்புக்காவும், ஆவிக்குறிய மற்றும் சரீர தேவைகளுக்காகவும் துஆ செய்வோம்.
 • ஈஸாவை ஈமான் கொண்ட பெரேலி முஸ்லீம்கள் தங்கள் இனத்தவர்களுக்கு சத்தியத்தை சொல்லவும், அவர்கள் மத்தியில் சபை ஸ்தாபிக்கவும் பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்தலை பெறவேண்டும் என்று துஆ செய்வோம்.
 • புதிய விசுவாசிகளின் பாதுகாப்புக்காவும் அவர்களை வழிநடாத்துகிறவர்களின் பாதுகாப்புக்காகவும் துஆ செய்வோம்.

என் அழு குரலைக் கேட்க யாராவது இருக்கிறார்களா?

Saudi women

 

சமீராவின் வீட்டில் அவளின் தாய் கடும் வியாதியால் பாதிக்கப்பட்டு பௌவீனமடைந்தாள். இதனால் சமீராவின் வீட்டிலுள்ள அனைவரும் துயரத்தில் வாடிக்கொண்டிருந்தனர். மூடுபனி அக்குடும்பத்தை சூழ்ந்துக் கொண்டது. சமீராவின் கேள்விக்கு யாரும் பதில் சொல்ல வில்லை. அவளின் தாயின் வியாகுல நிலையையும் அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை.

 

சமீராவின் தாயாரின் மரணத்தின் பின் எல்லோரும் அமைதியாக துக்கம் கொண்டாடினார்கள். தன் தாய்க்கு என்ன நடந்தது என்ற உண்மையை அவளால் புரிந்துகொள்ள முடியாதிருந்தது. யாரும் அது குறித்து அவளுடன் பெசவேயில்லை. “என் அழு குரலைக் கேட்க யாராவது இருக்கிறார்களா?” என்று தனக்குள் வேதனைப்பட்டுக்கொண்டிருந்தாள் சமீரா.

 

இப்படிப் பட்ட அநேக வேதனையான சம்பவங்கள் சவுதி அரேபியாவில் நாளார்ந்தம் நடக்கின்றது. இஸ்லாமியரைப் பொருத்தமட்டில் இறைவன் அதிக தூரத்தில் இருப்பதால் தனிப்பட்ட முறையில் தன் மீது எவ்வாறு கரிசனைக் கொள்வார் என்பதை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. ஈஸா அல் மஸீஹ்வை ஈஸா நபியாகவே இவர்கள் கருதுவதால் அவளை தன்னுடைய இரட்சகராகவும் நண்பராகவும் அறிந்து கொண்டவர்கள் சவுதி அரேபியாவில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே!

 

துஆ

 • சவுதியில் தனிமையில் துயரப்படுகிற ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஈஸா அல் மஸீஹ்வை கண்டுகொள்ள வேண்டும் என்று துஆ செய்வோம்.
 • ஈஸா அல் மஸீஹ்வை ஈமான் கொண்ட சவுதி மக்களுக்காக துஆ செய்வோம். அவர்கள் பெற்றுக்கொண்ட இறை பிரசன்னத்தில் அவர்கள் குடும்பத்தார்களையும் வழிநடத்த வேண்டும் என்று துஆ செய்வோம்.
 • சவுதி அரேபிய மக்களுக்கு சத்தியத்தை அறிவிக்க இறைவனால் தெரிவு செய்யப்பட்ட இறை மனிதர்களுக்காகவும் அவர்கள் குடும்பங்களின் பாதுகாப்புக்காகவும் துஆ செய்வோம்.

முஸ்லீம் முதியோருக்காக துஆ செய்வோம்.

dr. illyas

 

பொதுவாக இஸ்லாமிய கலாச்சாரத்தில் தீர்மானங்களை எடுப்பவர்கள் கோத்திர தலைவர்களாக இருந்துள்ளதை சரித்திர ரீதியாக பார்க்க முடிகிறது. கோத்திர தலைவன் இஸ்லாத்தை தழுவும்போது முழு கோத்திரமும் இஸ்லாத்தை தழுவிவிடுவார்கள்.

 

அதேபோல் கோத்திர முறைமை மறைந்து வரும் இந்த காலத்தில் குடும்பத்தில் முக்கிய தீர்மானங்களை எடுப்பவர்கள் முதியவர்களாக இருப்பதை அவதானிக்க முடிகிறது.

 

எனது தாயாரின் குடும்பத்தில் ஒன்பது சகோதர சகோதரிகள். அவர்களின் 24 பிள்ளைகளின் பிள்ளைகள் என்று குடும்பம் பெருகிக்கொண்டே போகிறது. எங்கள் மூத்தம்மாவின் கணவர் தான் இப்போதைக்கு குடும்பத்தில் பெரியவர். அவர் சொல்தான் எமது குடும்பத்தின் மந்திர சொல்லாக இருக்கிறது. அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை எவ்வளவு மோசமானது என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால் அவருடைய வார்த்தையை விரும்பாவிட்டாலும் யாரும் அவருக்கு முன்னால் எதிர்த்து பேசமாட்டார்கள்.

 

துஆ

 

 • இஸ்லாமிய குடும்ப தலைவர்கள் சத்தியத்தை அறிய வாய்ப்புகள் கிடைக்கவேண்டும் என்று துஆச் செய்வோம்.

 

 • ஈஸா அல் மஸீஹ்வை ஈமான்கொண்டுள்ள முதியோர்கள் தங்களின் சாட்சியை தங்கள் குடும்பத்தாருடன் பகிர்ந்துகொள்ள பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெறவேண்டும் என்று துஆ செய்வோம்.

 

 

 • கிறிஸ்த முதியோர் தைரியமாக இஸ்லாமிய முதியோருக்கு சத்தியத்தை அறிவிக்க வேண்டும் என்று துஆ செய்வோம்.

இலங்கை முஸ்லீம்களுக்காக துஆ செய்வோம்.

musulmans-du-Sri-Lanka

 

 

இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தால் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக 2012ம் ஆண்டுதான் நாடளாவிய சனத்தொகை கணக்கெடுப்பு நடாத்தப்பட்டது. 1981ம் ஆண்டு சனதொகை கணக்கெடுப்பில் 7.64வீதமாக (1,134556) இருந்த முஸ்லீம்கள் புதிய கணக்கெடுப்பில் 9.71வீதமாக (1,967,227) வளர்ச்சியடைந்திருந்தனர். மதமாற்றங்களும் இதில் உள்வாங்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பு பெரும்பான்மையான பெளத்தர்கள் மத்தியில் ஒரு பதட்ட நிலையை உருவாக்கியுள்ளது. பௌத்த அடிப்படைவாதிகளுக்கும் இஸ்லாமிய அடிப்படை வாதிகளுக்கும் இடையில் ஒரு முறுகள் நிலையே உள்ளது.

 

 

 

துஆ குறிப்புகள்

 

 1. அடிப்படைவாத மோதல்களால் பாதிப்புக்குள்ளாகின்ற இளைய சமுதாயத்தை இறைவன் காக்கவும். அவர்களுக்கு சுவிசேஷத்தை செவிமடுக்கும் வாய்ப்புகள் அதிகரிக்க வேண்டும் என்றும் துஆ செய்வோம்.
 2. இலங்கை திருச்சபைகள் இஸ்லாமியரை நேசிக்கவும் அவர்களுக்கு கிறிஸ்துவின் அன்பை காண்பிக்க முன்வரவேண்டும் என்றும் துஆ செய்வோம்.

 

3.                    இஸ்லாமிய பின்னணியில் இரட்சிக்கப்பட்டவர்கள் கிறிஸ்துவுக்குள் சரியான முறையில் வளரவும் தாங்கள் பெற்றுக்கொண்ட இரட்சிப்பின் அனுபவத்தை தங்கள் இனத்தவர்களுடன் பகிர்ந்துகொள்ள பரிசுத்த ஆவியானவரின் பெலன் கிடைக்க துஆ செய்வோம்.

 

4.              புது விசுவாசிகள் முகம் கொடுக்கும் சவால்களின்போது கிறிஸ்தவ சபை அவர்களை புரிந்துகொண்டு சரியான முறையில் வழிநடாத்த இறைவன் வழிகாட்ட வேண்டும் என்று துஆ செய்வோம்.

 

5.            இஸ்லாமியர் மத்தியில் ஊழியம் செய்கின்றவர்களின் பாதுகாப்புக்காகவும் ஒற்றுமைக்காகவும் பொருளாதார தேவைகளுக்காகவும் துஆ செய்வோம்.

 

என் தாயாரின் கபுரடிக்குச் செல்லும் வழியில் கார் ஓட்டுனருடன்…

 

என் தாயார் மரித்து சில நாட்கள் ஆனது. அவரது அடக்கஸ்தளத்தை காண நான் முதல்  முறையாகச் சென்றேன். என்னோடு ராதி என்ற என் நண்பரும் வந்தார். நாங்கள் ஒரு காரை வாடகைக்கு வைத்துக்கொண்டுச் சென்றோம். அந்த காரின் ஓட்டுனர், எங்களோடு அரசியல் பற்றி பேசிக்கொண்டே வந்தார்.

 

இந்த கார் ஓட்டுனர் படித்தவர் என்பதை நான் அறிந்துக்கொண்டேன். ஒரு பள்ளியில் தான் ஒரு சமூக சேவகனாக வேலை பார்ப்பதாகவும், தன்னுடைய வருமானம் போதுமானதாக இல்லாத காரணத்தால் பகுதி நேரமாக இப்படி கார் ஓட்டுனராக வேலை செய்வதாகவும் அவர் கூறினார். 

 

நான் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பு (PhD) படிக்க ஆரம்பித்த நாளிலிருந்து என் நண்பர் “ராதி” என்னை “டாக்டர்” என்றே அழைப்பார். இவர் என்னுடைய இன்னொரு நண்பரிடம் வேலை பார்க்கிறார். இவரைப் பற்றி அதிகம் அறியவேண்டும் என்று இந்த ஓட்டுனர் மிகவும் ஆர்வமாக இருந்தார். என்னிடம் இந்த ஓட்டுனர் தொடர்ச்சியாக கேள்விகளை கேட்டுக்கொண்டே இருந்தார். நான் சுருக்கமாக மட்டும் பதில் அளித்துக்கொண்டு இருந்தேன்.

சொனிகே முஸ்லீம்கள்

சொனிகே முஸ்லீம்கள்

 

 
இந்தசோனிக்கேமக்கள்ஆப்பிரிக்காவின்தென்பகுதியில்உள்ளசகாராபாலைவனப்பகுதியில்மேற்குபகுதியானசாஹேலில்வசிக்கின்றனர். அங்குசாதாரணமாகபகல்நேரவெப்பநிலை 45 பாகை செல்சியஸாக இருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையிலும்அவர்கள்பயிரிடும்தொழிலும், கால்நடைபராமரிப்பிலும் ஈடுபடுகின்றனர்.
 
இவர்கள்பொதுவாகவேகூட்டுக்குடும்பமாகசேர்ந்துமண் () சிமெண்ட்கற்கள்கொண்டவீடுகளில்வசிக்கின்றனர். ஆண்களில்அநேகர்தங்கள்குடும்பங்களைவிட்டுவேலைத்தேடிநகரங்களுக்கும், பட்டணங்களக்கும்பலசமயம்வெளிநாடுகளுக்கும்செல்கின்றனர். இதனால்நியூயார்க்,  பாரிஸ்போன்றநகரங்களில்மிகஅதிகளவில்இம்மக்கள்வசிக்கின்றனர். இவர்கள்தங்கள்மேற்குஆப்பிரிக்கமக்கள்இனத்துடன்நெருக்கமானதொடர்புகொண்டும், சம்பாத்தியத்தில்பெரும்பகுதியைதங்கள்குடும்பத்திற்குஅனுப்பியும்தாங்குகின்றனர்.

டெக்கானி முஸ்லீம்கள்

இளவரசி வேலைக்காரியானாள்

 

 
டெக்கான் என்று சொல்லப்படும் இஸ்லாமியர் 14 ஆம் நூற்றாண்டிலிருந்து டெக்கன் சமவெளியை ஆளுகை செய்து வருகிறார்கள், டெக்கான் அரசாங்கம் (ஹைதராபாத்) இந்திய அரசாங்கம் இஸ்லாமிய ஆளுகையிலே 1948 ஆம் ஆண்டு (நிஸாம் ராஜவம்சம்) போய் சேரும் வரையிலே அது ஒரு இளவரச மாநிலமாக இரண்டு நூற்றாண்டுகள் காணப்பட்டது. டெக்கானி என்பவர்கள் ஆளுனர்கள், அரச உரிமையாளர்கள், கடை உரிமையாளர்கள், தச்சர்கள், வாகன ஓட்டுனர்கள் போன்றோரி லிருந்து வந்தவர்களாவார்கள்.

 

 
ஆந்திரமாநிலத்தின்தலைநகரானஹைத்ராபாத்தில்அதிகளவிலானடெக்கானிஇஸ்லாமியா; (சுமார் 25 இலட்சம்) வசிக்கின்றனர். அவர்களில் 95%  சுன்னிமுஸ்லீமாகவும் 5%ஷியாமுஸ்லீமாகவும்தங்கள்நம்பிக்கையில்உறுதியானசூபிகள் தாக்கம்கொண்டுள்ளனர்.

“லைலதுல் கத்ர்”

வல்லமையான இரவு “லைலதுல் கத்ர்

 

 
இதற்காகஏற்கனவேதுஆ செய்யும்படிகேட்டுக்கொண்டுள்ளோம். ஆம்நாம்தொடர்ந்துஒவ்வொருவருடமும்இதைமுக்கியப்படுத்துகிறோம். இதுமிகவும்முக்கியமானது, மாற்றங்கொடுக்ககூடியது. ஆதலால்இந்தவல்லமையின்இரவுக்காகநாம்கரம்கோர்த்துமீண்டும்துஆ செய்யவேண்டும்.

 

 
அனேகஇஸ்லாமியர்கள்இயற்கைக்குஅப்பாற்பட்டவல்லமைப்பெறஇந்நேரத்திற்காகதாங்கள்திறந்தமனதுடன்இருக்கிறார்கள்என்பதைநினைவில்கொள்ளவேண்டும். சிலர்மலக்குகளால்விசேஷித்தவேண்டுதல்கள்அருளப்படுகிறதுஎன்றுஎதிர்பார்க்கின்றனர். மற்றவர்கள் மலக்குகளிடமிருந்து புதியவருடத்திற்கானஅறிவிப்பைஎதிர்ப்பார்க்கின்றனர். (இந்தவல்லமையின்இரவே, “அதிகாரப்பூர்வமானகட்டளைபெறும்இரவாககருதப்படுகிறது) இஸ்லாமியபெண்கள், இந்த இரவுதொழுகைக்குப்பிறகுகுழந்தைபாக்கியத்தைபெறுவர்எனநம்புகிறார்கள். ஆண்கள், சுகமும்ஆன்மீகபெலமும்உண்டாகும்எனநம்புகிறார்கள். முக்கியமாகஅனேகஇஸ்லாமியர்கள்இறைவனிடமிருந்துஒருதனிப்பட்டதொடுதலைப்பெறவாஞ்சித்துஉண்மையாய்தேடுகிறார்கள்.

கத்து குத்து ராதிபு போன்றது…

நாள் 24            ஆகஸ்டு 02,  2013     

 

                                                                                                                                                            இந்தோனேசிய மறைவான கலை ஆவணங்கள்
 
நீங்கள்எப்பொழுதாவதுமக்கள்தங்களைக்காயப்படுத்திக்கொள்ளாமல்நெருப்புத்தழலின்மேல்நடப்பதையும், கத்தியாலும்கூரானஆணிகளாலும்தங்களைஅறுத்துக்கொள்வதையும்பார்த்திருக்கிறீர்களா ? இதுதான்டெபஸ்என்பது. இதுஒருகலை. அதேசமயத்தில்இதுஒருயுத்தக்கலையும், சக்தியைவெளிப்படுத்தும்ஒன்றுமாகும். ‘டெபஸ்சடங்குகள்சிலவேளைகளில்திருமணங்களிலும்சிலமத வழிபாடுகளிலும் அநுசரிக்கப்பட்டுவருகிறது. கடவுள்இப்படிப்பட்டவல்லமையைசுத்தமுள்ளவர்களுக்கேதருவார்என்றுநம்பப்படுகிறது. மேலும்இதுபாண்டன்இந்தோனேஷியாமக்களின்தனிச்சிறப்புவாய்ந்தஅம்சமாகஇருக்கிறது. பாண்டன்மக்கள்மத்தியில்இந்தக்கலையின்அனுபவம்பெறாதஒருவரும்இல்லை.

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

நாள் 23                    ஆகஸ்டு 01, 2013          

 

 
 
 
நாம்வாழும்நவீனஉலகைப்புரிந்துகொள்ளுவோம்.
 
ஷரிஆஎன்பது  அரசியல், இறையியல், இராணுவம் போன்றவற்றை வளர்ச்சியடைய செய்யும்படியாக (முகமது நபியின் மறைவிற்குப்பின் ) ஆயிரம்வருடங்களாகஉருவாக்கப்பட்டசட்டங்களாகும். கோடிக்கணக்கானமுஸ்லீம்களுக்குஇது மார்க்கமாகவுள்ளது. கடுமையானஷரிஆசட்டம் 35 நாடுகளிலும், சற்றுக்குறைந்தஅளவில்மற்றமுஸ்லீம்நாடுகளிலும்நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. முஸ்லீம்குடும்பவிவகாரங்களில், இந்தச்சட்டம்இரட்டைஅமைப்பாகபலமேற்கத்தியநாடுகளின்கோர்ட்டுகளில்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பலஉண்மையானமுஸ்லீம்களுக்குஅடிப்படையானமதச்சட்டங்களானதொழுகை, நோன்பு, சக்காத் போன்றவைகள்தவிரஷரியாவைக்குறித்துவேறுஒன்றுமே தெரியாது.