உங்களுக்கு ஷரீஆவா அல்லது கிருபையா வேண்டும்?
ஈஸா அல் மஸீஹின் செய்தியின் மையம் என்ன?
யோவான் 1:17-18
17 எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின. 18 தேவனை ஒருவனும் ஒருக்காலுங்கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.
பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் இடையிலான வித்தியாசம் ஷரீஆவினால் உண்டாகும் நீதிக்கும் கிருபையினால் உண்டாகும் நீதிக்கும் இடையிலான வித்தியாசம் என்று கூறலாம். பத்துக்கட்டளைகளையும், இரத்த பலிகளைக் குறித்த கட்டளைகளையும், வாழ்க்கையில் ஒழுங்கைக் கொண்டுவரும் கட்டளைகளையும் இறைவன் மூஸா நபிக்கு கொடுத்தார். யாரெல்லாம் இந்தக் கட்டளைகளைக் கைக்கொண்டார்களோ அவர்கள் வாழ்வை பலனாகப் பெற்றார்கள். ஆனால் அவற்றில் ஏதாவதொன்றையாகிலும் மீறியவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். இவ்வாறு ஒரு மனிதனும் முழுமையானவனாக இல்லாத காரணத்தினால் ஷரீஆ மரணத்திற்கேதுவான நியாயத்தீர்ப்பாக இருந்தது. ஷரீஆவின் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க முடியாத காரணத்தினால் அதற்கு முன்பாக மிகவும் பக்தியுள்ளவர்கள்கூட மனந்திரும்பினவர்களாகவும் தங்கள் பாவத்துக்காக துக்கப்பட்டவர்களாகவும் உடைந்துபோய் காணப்பட்டார்கள். அரைகுறையானவர்கள் தங்களுடைய வாழ்க்கை இறைவனைப் பிரியப்படுத்துகிறது என்பதுபோல தங்களைப் பற்றி மேன்மையாக எண்ணிக்கொண்டார்கள். இது அவர்களை சுய மேன்மைக்கும் நியாயப்பிரமாண அடிப்படைவாதத்திற்கும் நடத்திச் சென்றது. அவர்கள் அன்பை மறந்து தங்களுடைய சுயநலச் செயல்களைப் பற்றி பெருமைபாராட்டினார்கள். ஷரீஆ தன்னில் தான் பரிசுத்தமாயிருக்கிறது, ஏனெனில் அது பரிசுத்தமுள்ள கடவுளைப் பிரதிபலிக்கிறது. ஆனால் அதற்கு முன்பாக ஒவ்வொரு மனிதனும் தீமையானவனாகக் காணப்படுகிறான். இந்த வகையில் ஷரீஆ நம்மை இழிவுக்கும் மரணத்திற்கும் நடத்திச் செல்லுகிறது.
இறைவனுடைய கலிமா
யோவான் 1:15-16
15 யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான். 16 அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம்.
நபி யஹ்யா பலத்த சத்தத்தோடு, எனக்குப் பின் வந்த மஸீஹ் எனக்கு முன்னிருந்தவர் என்று எல்லா மனித வம்ச வரலாறுகளையும் மிஞ்சத்தக்க வகையில் அறிவித்தார். இவ்வாறு அறிவித்ததன் மூலம் மஸீஹ்வின் நித்தியத்தை அவர் வலியுறுத்தினார். அவர் இடத்திற்கும் காலத்திற்கும் அழிவிற்கும் அப்பாற்பட்ட அழிவற்ற இறைவன் என்ற உண்மைக்கு சாட்சி பகர்ந்தார். வனாந்தரத்தில் நபி யஹ்யா மனிதர்களுடைய பாவத்தின் அளவைப் பார்த்து துயரப்பட்டார். பாவமன்னிப்பு ஏற்ற மனந்திரும்புதலை அவர்களுக்கு கற்பித்தார். அவர் ஈஸா அல் மஸீஹ்வை கண்டபோது, தன்னுடைய இருதயத்திலே துள்ளிக் குதித்தார். ஏனென்றால் மரணம் அவர் மேற்கொள்ள முடியாத சத்தியத்தினால் நிறைந்த நித்திய மனிதனாகப் பிறந்திருந்தார். ஈஸா அல் மஸீஹ்வின் மனுவுருவாதல் அல்லது அவருடைய பிறப்பு மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாகும். காரணம் அதன் மூலமாகவே இறைவனுடைய சதாகால வாழ்வு மனித உடலில் தோன்றியது. இதோடு மரணத்தின் மீதான ஜீவனின் வெற்றி ஆரம்பமானது. ஏனென்றால் மரணத்திற்குக் காரணமான பாவம் அவருக்குள் நீக்கப்பட்டிருந்தது. இந்தக் ரஹ்மத்தின் ஆழத்தை உணர்ந்தவராக, யஹ்யா நபி ஈஸா அல் மஸீஹ்வில் இருந்த இறைவனின் நிறைவை உயர்த்தி மகிழ்ந்து கொண்டாடினார். தெய்வத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது என்று பவுல் அறிக்கை செய்தார். அவருடைய பரிபூரணத்தினால் நாமெல்லாரும் கிருபையின் மேல் கிருபை பெற்றோம் என்ற உன்னத வார்த்தைகளில் இந்த சத்தியங்கள் ஒருங்கிணைத்துக் கூறுப்படுகிறது.
குமாரனைக் காண்கிறவன் பிதாவைக் காண்கிறான்
3. கலிமா மனுவுருவானதன் மூலம் இறைவனுடைய முழுமையும் உலகத்தில் தோன்றியது (யோவான் 1:14-18)
யோவான் 1:14
14 அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
யார் இந்த ஈஸா அல் மஸீஹ். அவரே மெய்யான இறைவனாக இருக்கிறார். இந்த மாபெரும் இரகசியமே இன்ஜீல் யோவானின் அடிப்படை நோக்கமாகும். இறைவனுடைய வார்த்தையின் மனுவுருவாதலைப் பற்றிப் பேசும்போது, இதற்குப் பின் வருகின்ற செய்திகள் அனைத்துக்குமே இந்தப் 14ம் வசனம்தான் திறவுகோலாகயிருக்கிறது. நீங்கள் இந்த ஆவிக்குரிய இரகசியத்தின் முழுமையான பொருளைப் புரிந்துகொண்டுவிட்டால், இனிவரும் அதிகாரங்களைக் குறித்த அறிவின் ஆழத்தை அடைவீர்கள்.
நீங்கள் மீண்டும் பிறந்துவிட்டீர்களா?
11 அவர்தமக்குச்சொந்தமானதிலேவந்தார், அவருக்குச்சொந்தமானவர்களோஅவரைஏற்றுக்கொள்ளவில்லை. 12 அவருடையநாமத்தின்மேல்விசுவாசமுள்ளவர்களாய்அவரைஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும்இறைவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். 13 அவர்கள், இரத்தத்தினாலாவதுமாம்சசித்தத்தினாலாவதுபுருஷனுடையசித்தத்தினாலாவதுபிறவாமல், இறைவனாலேபிறந்தவர்கள்.
கலிமதுல்லாஹ் மானிடனாக அவதரித்தல் (உ)
பகுதி 1
இறை ஒளியின் பிரகாசம் (யோவான் 1:1 – 4:54)
- 1. இறைவனுடைய வார்த்தை (கலிமதுல்லாஹ்) மானிடனாக அவதரித்தல்
(யோவான் 1:1-5)
யோவான் 1:1
“ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை இறைவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை இறைவனாயிருந்தது.”
மனிதன் வார்த்தைகள் மூலம் தன்னுடைய சிந்தனைகளையும் உள்நோக்கங்களையும் தெரிவிக்கிறான். உங்களுடைய வார்த்தைகளே உங்களுடைய ஆள்தத்துவத்தின் சாரமாகவும் உங்களுடைய ரூஹின் வெளிப்பாடாகவும் காணப்படுகின்றன.
ஒரு உயர்ந்த பொருளில் இறைவனுடைய வார்த்தை அவருடைய தெய்வீக ஆள்தத்துவத்தையும் அவருடைய பரிசுத்த வார்த்தையிலுள்ள அனைத்து வல்லமைகளையும் தெரிவிக்கிறது. ஏனென்றால் ஆதியிலே இறைவன் தன்னுடைய வல்லமையுள்ள வார்த்தையின் மூலமாகவே உலகத்தைப் படைத்தார். அவர் உண்டாகக்கடவது என்று சொன்னார், அது அப்படியே ஆயிற்று. அவருடைய வார்த்தைகளுக்கு இன்றுவரை வல்லமையிருக்கிறது. உங்கள் கரங்களில் இருக்கும் இந்த நற்செய்தி முழுவதும் இறைவனுடைய அதிகாரத்தினால் நிறைந்தது என்று நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? இது எந்த அணுகுண்டையும்விட வலுவானதாக செயல்பட்டு உங்களிலுள்ள தீமையை அழித்து உங்களில் நன்மையானதைக் கட்டியெழுப்புகிறது.
கலிமதுல்லாஹ் மானிடனாக அவதரித்தல் (ஈ)
6 இறைவனால் அனுப்பப்பட்டஒருமனுஷன்இருந்தான், அவன்பேர்யோவான்(யஹ்யா). 7 அவன்தன்னால்எல்லாரும்விசுவாசிக்கும்படி(ஈமான்கொள்ளும்படி) அந்தஒளியைக்குறித்துச்சாட்சிகொடுக்கசாட்சியாகவந்தான். 8 அவன்அந்தஒளியல்ல, அந்தஒளியைக்குறித்துச்சாட்சிகொடுக்கவந்தவனாயிருந்தான்.
கலிமதுல்லாஹ் மானிடனாக அவதரித்தல் (இ)
“அந்தஒளிஇருளிலேபிரகாசிக்கிறது; இருளானதுஅதைப்பற்றிக்கொள்ளவில்லை.”
கலிமதுல்லாஹ் மானிடனாக அவதரித்தல் (ஆ)
2 அவர்ஆதியிலேஇறைவனோடிருந்தார். 3 சகலமும்அவர்மூலமாய்உண்டாயிற்று; உண்டானதொன்றும்அவராலேயல்லாமல்உண்டாகவில்லை. 4 அவருக்குள்ஜீவன்இருந்தது, அந்தஜீவன்மனுஷருக்குஒளியாயிருந்தது.
கலிமதுல்லாஹ் மானிடனாக அவதரித்தல்
சொனிகே முஸ்லீம்கள்
டெக்கானி முஸ்லீம்கள்
“லைலதுல் கத்ர்”
கத்து குத்து ராதிபு போன்றது…
‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?
“ஒரு போதும் கைவிட்டுவிடாதே”
ஈஸா முஸ்லீம்களை ஆதரிப்போம்
தாய்வானில் பணிப்புரியும் இந்தோனேசிய இஸ்லாமியர்
சீன ஹூய் முஸ்லீம்கள்
சூபி இஸ்லாமியருக்காக துஆ செய்வோம்.
யூத, முஸ்லீம்களால் வேதனை படுத்தப்படும் பாலஸ்தீன கிறிஸ்தவர்கள்