Archives: குடும்பவியல்

இந்த சின்ன விஷயத்துக்கு போய்….

 

ScreenHunter_446 Sep. 10 16.51

பகுதி 1

எனது நண்பர் ஒருவரின் தந்தையாரை பாதை கடவையில் விபத்துக்குள்ளாக்கி, காலை முறித்த, பிரதான வங்கியொன்றின் உயர் அதிகாரி இப்படி சொன்னார் “இது ஒரு சின்ன விஷயம்தானே! இதுகு போய்….”

 

விபத்துக்குள்ளான தந்தைக்கும் அவர் குடும்பத்தாருக்கும் எப்படியிருக்கும் இந்த உயர் அதிகாரியின் பேச்சு என்று சிந்தித்துப் பாருங்கள். தண்டனை பெறவேண்டிய இந்த அதிகாரி தான் செய்த தவறை எவ்வளவு சூட்சமாக மறைக்கிறார் என்பதை உணரும் போது எப்படியிருக்கிறது. தான் தவறு செய்யவில்லையென்று நேரடியாக வாதாடமுடியாததால் இப்படியான சாதூர்யமான முறையில் தவறை மறைக்கிறவர்களாக பலரும் இருக்கின்றனர்.

 

ஒருமுறை எனது இன்னுமொரு நண்பர் தனது இரு சக்கர வண்டியில் பயணிக்கும்போது ஒரு பெண்ணின் கைப்பை அவர் வண்டியில் சிக்கியது. நண்பர் மீது தவறு இல்லாமல் இருந்தும் மனிதாபிமானமாக அவர் அந்த பெண்ணிடம் மன்னிப்புக்கோரினார். அதற்கு அந்த பெண்ணோ கெட்ட வார்த்தைகளால் எனது நண்பரை திட்டித்தீர்த்து விட்டார். அந்த கெட்ட வார்த்தைகள் காரணமாக, அந்த பெண்ணுக்கு மன்னிப்பு கொடுக்க என் நண்பருக்கு சில நாட்கள் சென்றதாக கூறினார்.

 

இந்த இரண்டு சம்பவங்களை பார்க்கும் போது, ஒருவர் தவறு செய்தும் அது தவறில்லை என்று மன்னிப்பு கேட்காமல் சமாளிக்கிறார். மற்றவர் தவறே செய்யாமல் மன்னிப்பு கேட்டு மன்னிக்கப்படாமல் இருக்கிறார். இவர்களில் யார் செய்தது சரியானது என்று பார்ப்பதல்ல இந்த கட்டுரையின் நோக்கம். நாங்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதை ஆராய்ந்து பார்ப்பதே நோக்கமாகும்.

ஆலோசனை என்றால் என்ன?

ஆலோசனை என்றால் என்ன?

 

images.jpg council

 

தீர்வை தேடி மருத்துவரிடம் செல்வதற்கு பலரும் யோசிப்பார்கள். ஆனால் இது ஒரு ஆய்வின் ஒரு பகுதி மாத்திரமேயாகும். மருத்துவர் முன்வைக்கின்ற புத்தகத்தில் பெற்றுகொள்ளமுடியாத காரியம் அனுபவமாகும்.  

அநேக போலியான கருத்துக்கள் உள்ளன.

நீங்கள் இந்த கலாச்சாரத்துக்குள் வாழ்வீர்களானால் உங்கள் சிந்தைக்குள் ஆலோசனை சம்பந்தமான கருத்துக்கள் ஓடிக்கொண்டிருக்கலாம். ஆலோசனை வழங்குவது என்பதை இவ்வாறு வரையறுக்கலாம்.

“பலவீனருக்கு” ஓர் ஒத்தாசை.

அது…’

அது மனநிலையை “பகுப்பாய்வு செய்வது” அவசியமானவர்களுக்கு.

ஆலோசனை வழங்குவது இந்த ஒரு காரியத்துக்காக மாத்திரமல்ல. தேர்ச்சிபெற்ற ஒருவருடன் ஏற்படுத்திக்கொள்கிற படிமுறை ஆலோசனை, நடைமுறை வாழ்க்கையில் ஏற்படுகிற பிரச்சினைகளுக்கு உதவியாக அமையும்.

 

தேர்ச்சிபெற்ற ஒருவருடன் ஏற்படுத்திக்கொள்கிற படிமுறை ஆலோசனை, நடைமுறை வாழ்க்கையில் ஏற்படுகிற பிரச்சினைகளுக்கு உதவியாக அமையும்.  

  • உங்கள் செயல்கள், உணர்வுகள் மற்றும் தொடர்புகளுக்கு ஒரு காட்சி கோணத்தை ஏற்படுத்துவதற்கு வழியை அது ஏற்படுத்தும்.
  • அது உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவும் சிந்திக்கும் முறையை அறிந்து கொள்ளவும் வழிமுறைகளை முன்வைக்கிறது.  
  • அது பலமுறைகளில் சோர்வு, மன அழுத்தம், கோபத்தை கட்டுப்படுத்துகிறது.
  • அது சண்டை சச்சரவுகளுக்கு முகம்கொடுக்கும் போது, தொடர்பாடல் ஆற்றலை வளர்த்துகொள்ள உதவியாக இருக்கும்.
  • அது வேதனைகளுக்கு முகம்கொடுப்பதால் ஏற்படும் இழப்புகளுக்கூடாக செயல்பட்டு, உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்ற உதவியாக அமையும்.

பின்வரும் முறைகள் அதற்குள் அடங்கலாம் அடங்காமலும் இருக்கலாம். ஆலோசனை வழங்குவது என்பது திறமைகளை வளர்த்துக்கொள்ள, ஆலோசனை பெற்றுகொள்ளும் படிமுறை. என்று நீங்கள் சிந்திப்பீர்களேயானால், நீங்கள் பலவிடயங்களை இழக்கவேண்டி ஏற்படும்.

அப்படியென்றால் லோசனை வழங்குதல் என்றால் என்ன?