ஆலோசனை என்றால் என்ன?

ஆலோசனை என்றால் என்ன?

 

images.jpg council

 

தீர்வை தேடி மருத்துவரிடம் செல்வதற்கு பலரும் யோசிப்பார்கள். ஆனால் இது ஒரு ஆய்வின் ஒரு பகுதி மாத்திரமேயாகும். மருத்துவர் முன்வைக்கின்ற புத்தகத்தில் பெற்றுகொள்ளமுடியாத காரியம் அனுபவமாகும்.  

அநேக போலியான கருத்துக்கள் உள்ளன.

நீங்கள் இந்த கலாச்சாரத்துக்குள் வாழ்வீர்களானால் உங்கள் சிந்தைக்குள் ஆலோசனை சம்பந்தமான கருத்துக்கள் ஓடிக்கொண்டிருக்கலாம். ஆலோசனை வழங்குவது என்பதை இவ்வாறு வரையறுக்கலாம்.

“பலவீனருக்கு” ஓர் ஒத்தாசை.

அது…’

அது மனநிலையை “பகுப்பாய்வு செய்வது” அவசியமானவர்களுக்கு.

ஆலோசனை வழங்குவது இந்த ஒரு காரியத்துக்காக மாத்திரமல்ல. தேர்ச்சிபெற்ற ஒருவருடன் ஏற்படுத்திக்கொள்கிற படிமுறை ஆலோசனை, நடைமுறை வாழ்க்கையில் ஏற்படுகிற பிரச்சினைகளுக்கு உதவியாக அமையும்.

 

தேர்ச்சிபெற்ற ஒருவருடன் ஏற்படுத்திக்கொள்கிற படிமுறை ஆலோசனை, நடைமுறை வாழ்க்கையில் ஏற்படுகிற பிரச்சினைகளுக்கு உதவியாக அமையும்.  

 • உங்கள் செயல்கள், உணர்வுகள் மற்றும் தொடர்புகளுக்கு ஒரு காட்சி கோணத்தை ஏற்படுத்துவதற்கு வழியை அது ஏற்படுத்தும்.
 • அது உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவும் சிந்திக்கும் முறையை அறிந்து கொள்ளவும் வழிமுறைகளை முன்வைக்கிறது.  
 • அது பலமுறைகளில் சோர்வு, மன அழுத்தம், கோபத்தை கட்டுப்படுத்துகிறது.
 • அது சண்டை சச்சரவுகளுக்கு முகம்கொடுக்கும் போது, தொடர்பாடல் ஆற்றலை வளர்த்துகொள்ள உதவியாக இருக்கும்.
 • அது வேதனைகளுக்கு முகம்கொடுப்பதால் ஏற்படும் இழப்புகளுக்கூடாக செயல்பட்டு, உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்ற உதவியாக அமையும்.

பின்வரும் முறைகள் அதற்குள் அடங்கலாம் அடங்காமலும் இருக்கலாம். ஆலோசனை வழங்குவது என்பது திறமைகளை வளர்த்துக்கொள்ள, ஆலோசனை பெற்றுகொள்ளும் படிமுறை. என்று நீங்கள் சிந்திப்பீர்களேயானால், நீங்கள் பலவிடயங்களை இழக்கவேண்டி ஏற்படும்.

அப்படியென்றால் லோசனை வழங்குதல் என்றால் என்ன?

ஆலோசனை வழங்குவது என்பது பெலப்படுத்தும் முறையாகும்.

ஆலோசனை வழங்குதல் என்பது, தனக்குள் இருக்கும் பயத்துக்கு முகம்கொடுத்து, அவர்களின் வாழ்க்கையில் மிகவும் அவசியமான ஒரு பகுதியை தங்கள் வாழ்க்கையில் வளர்த்துக்கொண்டு, தனிப்பட்ட மற்றும் தொழில்சார்ந்த ஆகிய இரண்டு பகுதிகளிலும் தங்களின் இலக்கை நிச்சயித்துகொள்வதற்கும், தைரியமாக முகம்கொடுப்பதற்குமேயாகும்.

அப்படியே இந்த செயல்பாட்டுக்கூடாக, ஆலோசனையால் உங்கள் மனதை (அல்லது சிந்தையை) மாற்றுவதற்கான திறமை இருக்கிறது.

புதிய நோக்கு

ஆலோசனை வழங்குவது என்பது (

ஆலோசனை வழங்குவது என்பது மனிதர்களுக்கு அவர்களின் தொடர்புகளோடு அல்லது வாழ்க்கையின் இக்கட்டான சூழ்நிலைகளுக்கு முகம்கொடுக்க, தகுதியான ஒருவரின் உதவியை பெறும் படிமுறையாகும். ஆலோசகரோடு சம்பாஷிப்பதற்கூடாக, பிரச்சினையை ஆராயவும் பாதுகாப்பான, உதவக்கூடிய சூழலை உருவாக்கவும் உதவியாக இருக்கும். இந்த ஆய்வுக்கூடாக, நிலைமையை பற்றி, புதிய மாற்று வழிகளை ஏற்படுத்திக்கொள்ள, அந்த நிலைமையை பார்ப்பதற்கு புது முறைகளை வளர்த்துக்கொள்வதற்கு ஒருவருக்கு உதவிசெய்ய முடியும்.

ஆலோசனை வழங்குவது என்பது சேவையை பெறுபவரின் மனநிலையை நல்லவிதத்தில் உயர்த்துவதை நோக்கமாகக்கொண்ட படிமுறையாகும். அதற்கூடாக சேவையை பெறுபவருக்கு பூரண பெலன் கிடைக்கும்.

உங்கள் வாழ்க்கையின் பழக்கங்களை மிகவும் செயல் திறனுள்ளதாக மாற்றி, உங்களை பெலனுள்ளவராக்க தனிப்பட்ட வளர்ச்சி, அபிவிருத்தி, தன்னைக்குறித்து புரிந்துகொள்ள இலகுவாக்குவதே ஆலோசகரிடமிருந்து கிடைப்பதாகும்.

புதிய நிலைமைகளில் ஒருவர் நடந்துகொள்ளும் விதத்தை கட்டுப்படுத்திக்கொள்ள, பிரயோஜனமான முறையில் முகம்கொடுக்க உதவியாக இருக்கும்பொருட்டு, படிமுறைகளை வளர்த்துக்கொள்ள உதவியாக இருப்பதற்கு, ஆலோசகர் அவரோடு இணைந்து செயல்படுவதே ஆலோசனை வழங்குவதாகும்.

ஆலோசனை வழங்குவது மனிதர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கவும், தீர்மானங்களை எடுக்கவும் அவர்களின் சிந்தை மற்றும் உணர்வுகளுக்கூடாக செயல்படவும் உதவும்.

ஆலோசனையானது மனிதர்களுக்கு மீண்டும் உறுதிப்படுத்தி, வழிகாட்டி, விளக்கிக் கூறி, அவர்களின் நடைமுறை மற்றும் மனரீதியான தேவைகளுக்கு தெளிவாக செவிகொடுப்பதற் கூடாக தைரியப்படுத்துவதற்கு ஒத்தாசை புரியும்.

மனிதனுடைய செயற்பாடுகள் நல்லவிதத்துக்கு திரும்புவதற்கு, புதிய நிலைமையாக மாற நன்கு கட்டுப்பாட்டு முறையை வளர்த்துக்கொள்வதற்கும், அவற்றுக்கு மிகவும் பலனுள்ள விதத்தில் முகங்கொடுப்பதற்கும் ஒரு ஆலோசகரோடுகூட வேலைசெய்வது, ஆலோசனைக்கு தொடர்ப்புடையதாகும். பலவிதமான ஆலோசனை முறைகள் உதவியாக அமையும்.

 • நீங்கள் அக்கறைக் காட்டும் விடயங்கள் பற்றி தெளிவான புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ளும் ஆற்றலை வழங்கும் ஆற்றல் அதற்கு உண்டு. மேலும் கல்வி மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகளை கட்டுப்படுத்த புதிய திறமையை பெற்றுக்கொள்ளவும் உதவும்.
 • ஆலோசனை வழங்குபவர் வித்தியாசமான பார்க்கும் கோணத்தை முன்வைக்க முடியும். அதேபோன்று ஆக்கபூர்வமான பதிலை சிந்திக்க உங்களுக்கு உதவ முடியும்.
 • தனிப்பட்ட ரீதியில் உங்கள் வாழ்க்கைக்கு தொடர்பு படாத ஒருவருடன் உங்கள் உணர்வுகள், சிந்தனைகளை பகிர்ந்துகொள்வது மிகவும் பிரயோஜனமாயிருக்கும்.

“ஆலோசனை செயற்படுவது எப்படி? நீங்கள் மனிதர்களுக்கு ஆலோசனை வழங்குகின்றீர்களா?”

ஆம், கொஞ்சம் ஆனால் நான் அதிகம் ஆலோசனை வழங்கினால் எனது வேலையை செய்வதில்லை.

“அப்படியென்றால் நீங்கள் மனிதர்களுக்கு செவிசாய்க்கிறீர்கள்”

அது சரியான பதில்தான். ஆனால் போதுமான விளக்கம் அல்ல.

“ஆம் அவர்களிடம் கேள்விகள் கேட்கிறோம்”

ஆம், அதுவும் ஒரு பகுதிதான்.

“சரி அப்படியானால் அது எப்படி செயல்படும்?”

சில சந்தர்ப்பங்களில் சேவையை பெறுபவர் ஏதாவதொரு விசேஷ விடயத்தைப் பற்றி பேசுவதற்கு தேவையுள்ளவராயிருப்பார். அப்படியான சந்தர்ப்பங்களில் அவர் குழம்பிப் போயுள்ள விடயம் என்னவென்பதை அறிந்துகொள்வதற்காக கேள்விகள் கேட்பேன். எந்தவொரு விடயமானாலும் அந்த சந்தர்ப்பத்தில் சிந்தனை படிமுறையை வெளிப்படுத்தும் ஏதாவதொரு எதிர்மறையான காரியத்தை அனுபவித்துள்ளார்.

ஆனால் இப்பொழுது அவர் அதனை நேர்மறையாக அனுபவிக்கின்றார். ஏனென்றால் இப்பொழுது எங்கள் உறவு ஒரு உறுதியான நிலைக்கு வந்துள்ளது. ஆகவே அதனை குறித்து பேசுவது பாதுகாப்பானதாகும்.

நான் செவிமடுத்தேன் என்பது அவர்களுக்கு புரியும். அவர்களை வேதனைப்படுத்திய காரியங்கள் சிலவற்றை நான் அனுபவித்துகொண்டிருக்கிறபடியால் அவர்களுக்கு தோன்றுவது எனக்கும் புரியும் என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள். நிச்சயமாக அது ஆறுதலைக் கொண்டுவரும்.

நாம் ஏன் ஆலோசனை பெற்றுகொள்ள வேண்டும்?

மனிதர்கள் ஆலோசனை பெற்றுகொள்ள வேண்டும் என்று தீர்மானிப்பதற்கு பல காரணங்கள் உண்டு.

அது கல்விக்கு சமனானது. அது உங்களுக்குள் முதலீடு செய்வதாகும். எந்த வயதில் அதனை ஆரம்பிக்கின்றீர்கள் என்ற பிரச்சினையில்லை. உங்களுக்கு நன்மைகளை பெற்றுக் கொள்ள வாய்ப்புகள் உள்ளது. கல்விக்கு போன்று இந்த படிமுறைக்கும் உங்களை அர்ப்பணிக்கும்போது, நல்ல பிரதிபலன்களைப் பெற்றுக்கொள்ளமுடியும்.

உங்கள் முதலாவது ஆலோசனை பாடத்தை ஆரம்பித்து, உங்களை தெளிவூட்டும்பொழுது, உங்கள் எதிர்பார்ப்பு என்ன என்பது மாத்திரமன்றி, உங்கள் வளர்ச்சிக்கூடாக, நீங்கள் உற்சாகத்தோடு கலந்துகொள்ள உங்களை நன்கு ஆயத்தப்படுத்தும்.

நான் ஆலோசனை பெறவேண்டியவன் என்பதை எப்படி தீர்மானிப்பது?

நீங்கள் ஆலோசனை பெற்றுக்கொள்வது அவசியம் என்பதற்கு அறிகுறிகள் தென்பட தேவையில்லை. ஆலோசனை பெற்றுக்கொள்வதென்பது மன அழுத்தத்தை குறைத்து கொள்வதும் மனவளர்ச்சியை அதிகரிப்பதைவிடவும் மேலானதாகும்.

மற்றவர்களோடு தொடர்பு படுவது எப்படி? திறமைகளை வளர்த்துக்கொள்வது எப்படி? எப்படி ஆரம்பிப்பது? எப்படி திட்டமிடுவது? எப்படி அடிப்படை பிரச்சினைகளை அணுகுவது? வியாபாரத்திலுள்ள தடைகளை எப்படி மேற்கொள்வது? தனிப்பட்ட வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி? போன்ற பல காரியங்களுக்காக பலரும் ஆலோசனை பெற்றுக்கொள்ள செல்கின்றனர்.

தனிப்பட்ட முறையில் ஆலோசனை பெற்றுக்கொள்வதை ஆரம்பிப்பதற்கு கணக்கிட முடியாத காரணங்கள் இருப்பதை அவதானிக்கலாம்.

உங்கள் வாழ்க்கைக்கு ஒரு காரியம் கூடுதலாக தேவையென்றபடியால்தான் நீங்கள் போகிறீர்கள். தொடர்ந்தும் ஆலோசனையை பெற்றுக்கொள்ள காரணமாயிருந்ததும் அந்த காரியமே.

ஆலோசனை பெற்றுக்கொள்வதற்கு ஏதாவது ஒரு மனநோய் எனக்குள் இருக்கவேண்டுமா? நிச்சயமாக இல்லை.

நான் ஆரம்பத்தில் சொன்னது போன்று உங்கள் வாழ்க்கையை கட்டியெழுப்ப ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம். ‘

“மனநோய்” இருக்கின்றதா என்பதைக்குறித்து அநேக கருத்துக்கள் இருக்கின்றன. “மனநோய்” என்ற வார்த்தை மனோதத்துவ வார்த்தையல்ல என்று நீங்கள் அறியாமல் இருக்கலாம். இதனை “பிரதியுத்தரம் காண்பிக்காமை” என்றே மருத்துவர் வரையறுக்கின்றனர். ஒருவர் திடீரென ஒரு சந்தர்ப்பத்துக்கு முகங்கொடுக்க முடியாமல் போவதையே பொதுவாக வரையறுக்கப்படுகின்றது. அவர்கள் எப்பொழுதும் தாங்கிக்கொள்ளமுடியாமல் அழுகின்றவர்கள். சிறு காரியத்துக்கும் அதைரியப்படக் கூடியவர்கள். சிந்தனையை சீராக வைத்திருக்க முடியாதவர்களாயிருப்பார்கள். அவர்கள் அதிக மனக்கவலை உள்ளவர்களாக இருப்பார்கள்.

எனது உணர்வு சம்பந்தமாக கதைப்பதற்கு நான் எதற்காக ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டும்? அந்த காரியத்தை ஒரு நண்பனால் செய்யமுடியாதா?

ஆலோசனை நட்பிலிருந்து பிரதானமாக எவ்வாறு வேறுபடுகிறது என்பதை புரிந்து கொள்வதற்கு முதலில் ஆலோசனை எப்படி செயல்படுகிறது என்பதை கற்றுகொள்ள வேண்டும். அதற்கான ஒரு பதில் இங்கு சுருக்கமாக உள்ளது.

இந்த கேள்வியில் வெளிப்படுவது, தனிப்பட்ட ஆலோசனை பெற்றுக்கொள்வது என்பது, உங்களின் உணர்வுகளை சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கு அல்லது ஏதாவது ஆலோசனை பெற்றுக்கொள்வதற்கு போகும் இடத்தை குறித்ததாகும்.

இந்த கூற்று ஆலோசனைக்குள் உள்ளடங்கியிருந்தாலும் பழக்கப்பட்டுள்ள விதமே தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளது. நண்பராயில்லாமல் பிரயோஜனமான மருத்துவர், பிரயோஜனமான மாற்றத்துக்கு நெருங்குவதும் தூரமாக்குவதும் எந்த சந்தர்ப்பத்தில் இடைப்படுவது நல்லது என்பதை அறிந்திருப்பார். இவையெல்லாம் உங்களைப் பற்றியதாகும். நட்புக்குள் பறிமாறிக்கொள்வது முறையானதல்ல.

தொடர்ந்தும் ஆலோசனை வகுப்புகள் நடாத்தும்போது, உங்கள் உணர்வற்ற பகுதிகள் அதாவது, உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகள் தொடர்ந்து படிப்படியாக கட்டுப்பாட்டுக்குள் வரும். இந்த உள்ளார்ந்த ஞானம் இல்லாவிட்டால் உங்கள் நண்பரோடு பகிர்ந்துகொள்ளும் விடயங்களில் ஆழமான அறிவை பெறமுடியாது.

3 Responses to ஆலோசனை என்றால் என்ன?

 1. Sugun says:

  Good article,especially in Thamil

 2. You actually make it seem so easy with your presentation but I find
  this matter to be really something that I think I would never understand.
  It seems too complicated and very broad for
  me. I am looking forward for your next post, I’ll try to get the hang of it!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *