ஈஸா அல் மஸீஹ்வின் இரண்டாம் வருகை


நிகரற்றஈஸாஅல்மஸீஹ் – பகுதி 4

 


 
குர்ஆனிலும்இறைவேதத்திலும்  ஈஸாஅல்மஸீஹ்அவர்களின்தனித்துவம்

 

 
). ஈஸா அல் மஸீஹ்வின் இரண்டாம்வருகை

 

 
ஈஸாவன் வாழ்வுபற்றிகுர்ஆனும்இறைவேதமும்ஒத்துள்ள, நாம்கருத்திற்கொள்ளவேண்டியகடைசி காரியம், ஈஸா அல் மஸீஹ்வின்இரண்டாம்வருகைஆகும். குர்ஆனில்ஈஸா அல் மஸீஹ்வின்வருகைபற்றிதெளிவாகபோதிக்கும்ஒருவசனம்பின்வருமாறு:

 

 
நிச்சயமாகஅவர் (ஈஸா) இறுதிக்காலத்திற்குரியஅத்தாட்சியாவார்.                                           சூறா 43:61

 

 
இந்த பகுதிஅரபுமூலப்பிரதியில்சுருக்கமாககூறப்பட்டிருப்பினும்ஆங்கிலமொழிபெயர்ப்பானதுசரியாகவேகாணப்படுகின்றது. மீண்டுமாகஇரண்டாவதுவருகைநிகழும்விதம்மற்றும்அதன்விளைவுதொடர்பாககிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும்வித்தியாசப்படுகின்ற போதிலும்அந்தஉண்மையைஏற்றுள்ளனர். இறைவேதத்தின்தீர்க்கதரிசிகள்புத்தகத்தில், ஈஸா அல் மஸீஹ்வின்இரண்டாம்வருகையானதுஅதிகளவில்பேசப்பட்டுள்ளகருத்துக்களில்ஒன்றாகும். அவற்றுட்சிலவற்றைஇங்குகுறிப்பிடுவதுபோதுமானது:

 

 
அப்பொழுது, மனுஷகுமாரனுடையஅடையாளம்வானத்தில்காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன்வல்லமையோடும்மிகுந்தமகிமையோடும்வானத்தின்மேகங்கள்மேல்வருகிறதைப்பூமியிலுள்ளசகலகோத்திரத்தாரும்கண்டுபுலம்புவார்கள் (மத்தேயு 24:30).

 

 
ஏனெனில், கர்த்தர்தாமேஆரவாரத்தோடும், பிரதானதூதனுடையசத்தத்தோடும், தேவஎக்காளத்தோடும்வானத்திலிருந்துஇறங்கிவருவார் (1தெசலோனிக்கேயர் 4:16).

 

 
இதோ, மேகங்களுடனேவருகிறார்கண்கள்யாவும்அவரைக்காணும், அவரைக்குத்தினவர்களும்அவரைக்காண்பார்கள் பூமியின்கோத்திரத்தாரெல்லாரும்அவரைப்பார்த்துப்புலம்புவார்கள். அப்படியேஆகும், ஆமென்                (வெளிப்படுத்தினவிசேஷம் 1:7).

 

 
ஈஸா அல் மஸீஹ்வின்இரண்டாம்வருகையானது, நியாயத்தீர்ப்பின்நாளைஅறிவித்துநிற்கின்றதுஎனும்முடிவுக்குநாம்வரலாம். குர்ஆனும்இறைவேதமும்ஒத்துள்ளகருத்தாகும்.

 


இறைவேதத்தில்இயேசுவைவிபரிக்கும்பலபெயர்கள்குர்ஆனிலும்மீண்டும்மீண்டும்கூறப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கமுக்கியவிடயமாகும். உதாரணமாக, இருபுத்தகங்களிலும்அவர்‘இறைவனுடையவார்த்தைஎனஅழைக்கப்படுகிறார். அவரை மேசியாஎனஅழைப்பதில்குர்ஆனும்வேதாகமத்துடன்ஒத்துள்ளது. அதேபோலஅவர்இறைவனிடமிருந்துவந்தஆவியானவர்எனவும்குர்ஆனில்அழைக்கப்படுகின்றார்.

 


இதுவரைநாம்காண்பிக்கமுயன்றநான்குகுணாதிசயங்களும்ஈஸா அல் மஸீஹ்வின்வாழ்விலும்அவரதுஆள்தத்துவத்திலும்அவரைதனித்துவமானவராககாட்டுகின்றது. மேலும்வேறுஎவருக்கும்பயன்படுத்தப்படாதநாமங்களைகுர்ஆனும்இறைவேதமும்அவருக்குமட்டுமேவழங்கியுள்ளதுஎன்பதனைநாம்நினைவிற்கொள்வதுமுக்கியமானதாகும்.

 

2 Responses to ஈஸா அல் மஸீஹ்வின் இரண்டாம் வருகை

  1. அருமையாக தொடர் செல்கின்றது. தொடர்ந்து எழுதுங்கள். கர்த்தரின் கரம் உங்களை வழிநடத்தும்.

  2. உங்கள் துஆக்களில் எங்களை தாங்குங்கள் சகோதரரே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *