உன்னதப்பாட்டை குறித்த முன்னால் இஸ்லாமியனின் கருத்து

(முகப்புத்தகத்திலிருந்து)song of solomon

உன்னதப்பாட்டை குறித்து முன்னால் இஸ்லாமியனின் கருத்து

அல் கிதாபில் (பைபிளில்) உன்னதபாடல் என்ற ஒரு கிதாப் உள்ளது. அது ஆபாச புத்தகம் என்று நவீனகால இஸ்லாமிய அறிஞர்கள் (அவர்கள் காபிர்கள் என்று 99 வீதமான இந்திய இஸ்லாமியர் பத்வா கொடுத்துள்ளார்கள்) என்று தங்களை காட்டிக்கொள்ளும் சிலர் முகபுத்தகங்களிலும் இணையத்தளங்களிலும், விவாதங்களிலும் ஜும்மா பயான்களிலும் ஆபாசமாக பயான் செய்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆபாசாமாக பேசினால்தான் அநேகர் விரும்பி தங்கள் பயான்களை கேட்பார்கள் என்பது அவர்கள் விரும்பமாக இருக்கிறது. அதற்கு ஆதாரமாக முஹமது நபி மூன்று சந்தர்ப்பங்களில் பொய் சொல்ல அனுமதித்தார். அதில் ஒன்று தன் மனைவியிடம் பொய் சொல்ல முஹமது நபி அனுமதி கொடுத்திருக்கிறார். ஆகவே மனைவியை பொய்யாக வர்ணித்து அவளை ஏமாற்றலாம். இரண்டாவது இருவருக்கிடையில் சண்டை நடக்கும் போது அவர்களை பொய் சொல்லி சமாதானம் செய்யலாம். மூன்றாவது போர்களத்தில் பொய் சொல்லலாம்.
மனைவியை பொய்யாக வர்ணிக்கவேண்டும் என்று இந்த அறிஞர்கள் விளக்கம் கொடுப்பார்கள். ஆனால் தூய இறைவன் தன் உம்மத்தை தனது மனைவிபோல் நேசிக்கிறவர். அதாவது அவர் தனது சமுதாயத்தை நேசிப்பது போல், ஒவ்வொருவருக்கும் தன் மனைவியை நேசிக்குமாறு கூறுகிறார். ஒரு கணவன் எப்படி தன் மனைவிக்கு பொய் சொல்லாமல் உண்மையாக அவளை நேசிக்கவேண்டும் என்பதை உன்னதபாடல் என்ற கிதாபுக்கூடாக தெளிவு படுத்துகிறார்.

இப்பொழுது அந்த அறிஞர்கள் கேட்பார்கள் “ அறையில் செய்யவேண்டிய காரியத்தை இப்படி பகிரங்கமாக பேசுவது இறைவேதமா” என்று. இப்படிச் சொல்லும் அறிஞர்கள் தங்கள் மனைவிமாரை அழைத்துச்சென்று ஆண் வைத்தியரிடம் மறைவான வியாதி ஒன்றுக்காக மருத்துவம் பார்க்கவேண்டி ஏற்பட்டால், மூன்றாவது நபர் அன்னிய ஆடவனிடம் அதைப்பற்றி பேசியும், காட்டியும்தானே ஆகவேண்டும்??
இப்பொழுது அது ஆபாசம் என்று யாராவது வர்ணித்தால் இந்த அறிஞர்கள் எப்படியான பதிலை கொடுப்பார்கள்??

இறைவனுக்கே ஆபாசம் கற்பிக்கும் இந்த அறிஞர்களை நம்பி அவர்களின் அறியாமை கருத்துக்களை ஷேர் செய்யும் வாலிபகூட்டத்தின் கண்கள் திறக்கப்பட நாம் துஆச் செய்ய கடமைப்பட்டுள்ளோம்.

அந்த அறிஞர்கள் போர்களம் என்பதை விவாதக்களங்களாகவும் பயான் மேடைகளாகவும் தங்களுக்குவேண்டிய வியாக்கியானம் செய்துகொண்டு பொய்களையும் புறட்டுகளையும் பரப்பிக்கொண்டு தமிழ் பேசும் இஸ்லாமிய வாலிபர்களை நரகத்துக்கு அழைத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த வாலிபர்களை காப்பாற்ற இறைவனிடம் மன்றாடுவோம். எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கும் நேர்வழிகாட்ட போதுமானவர்.

One Response to உன்னதப்பாட்டை குறித்த முன்னால் இஸ்லாமியனின் கருத்து

  1. Lissa says:

    Everyone loves what you guys are up too. This sort of clever work and coverage! Keep up the amazing works guys I&8;217#ve added you guys to my personal blogroll.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *