கொன்காணி மொழி பேசும் ஷேக் முஸ்லீம்கள்

நாள் 11ஜுலை20, 2013

கொன்காணி  மொழி பேசும் ஷேக் முஸ்லீம்கள்

உலக முழுவதும் 20 கோடி ஷேக் முஸ்லீம்கள் இருக்கிறார்கள். அவர்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானவர்கள் இந்தியாவில் வசிக்கிறார்கள். மற்றவர்கள் பாகிஸ்தானிலும், பங்களாதேசத்திலும் வசிக்கிறார்கள். மத்திய இந்தியாவின் தக்காண பீடபூமியில் உள்ள சுன்னி முஸ்லீம் மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் ஷேக் முஸ்லீம்கள். இந்திய மாநிலமான கோவாவின் அரசவாங்க மொழி கொங்கனி ஆகும். கொங்கனி மொழி பேசும் ஷேக் முஸ்லீம்கள் பிரதானமாக மேற்கு இந்தியாவில் மும்பைக்கும் கோவாவிற்கும் இடையில் உள்ள கடற்கரைப் பகுதிகளில் வசிக்கின்றனர் என்று ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களது மொத்த ஜனத்தொகை 20 இலட்சம்.

‘ஷேக்’ என்ற வார்த்தை ஒரு காலத்தில் அரபு வம்சாவழியினருக்கே அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது தென் இந்தியாவிலும் மத்திய இந்தியாவிலும் இந்து மதத்திலிருந்து தாழ்ந்த ஜாதியிலிருந்து மூன்று அல்லது நான்கு தலைமுறைக்கு முன்பாக மதம் மாறிய குறிப்பிட்ட இஸ்லாமிய மக்களுக்கும், வட இந்தியாவில் சூஃபி மிஷினரிகளின் வேலையினிமித்தமாக மதமாறிய உயர்  ஜாதி இந்துக்களுக்கும் இப்பெயர் வழங்கப்படுகிறது.

சில சமயங்களில் இந்தியாவின் ஷேக் சமுதாயங்கள் அவர்களைச் சுற்றியுள்ள மற்ற முஸ்லீம்களைவிட மிகவும் வேறுபட்டவர்களாகக் காணப்படுகின்றனர் ஆனால் சில நேரங்களில் அவர்களுடன் கலந்தும் விடுகின்றனர். எனவே ஷேக் மக்களிடையே உள்ள சிறு பிரிவினர்களைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கிறது. இருப்பினும் பிராந்திய மொழி வித்தியாசங்கள் அவர்களை வகைப் படுத்துவதற்கு உதவியாக இருக்கிறது.

எல்லா ஷேக்குகளும் சுன்னி முஸ்லீம்களாக இருந்தாலும் அவர்களது பழக்க வழக்கங்கள் வைதீக இஸ்லாமை விட்டு வெகு தொலைவில் இருக்கிறது. உள்ளுர் முஸ்லிம் துறவிகளின் வழிபடுவது சாதாரணமாகக் காணப்படுகிறது. அத்துறவிகளின் கல்லறைகளை வெகுவாக அலங்கரிப்பது இந்துக்களையும் ஈர்க்கிறது. இங்கு பக்திப் பாடல்கள் பாடுவதும், இசைப்பதும், தொழுகை செய்வதும் சாதரணமாக நடைபெறுகிறது. பக்தி உணர்வு இங்கு ஆழமாக உணரப்படுகிறது. பெரிய அளவில் சூஃபி உபதேசங்கள் எல்லாம் ஒன்று என்ற நிலைக்கு வழிநடத்திச் சென்றிருக்கிறது – எல்லா மார்க்கங்களும் இறுதியாக அல்லாவிடம் வழி நடத்துகிறது என்கிற உணர்வை அளித்திருக்கிறது.

இஸ்லாம்யர்களுக்கென்று அவர்கள் பேசும் கொங்கனி மொழியில் வேதாகமோ அல்லது சம்பந்தப்பட்ட இலக்கியங்களோ இல்லை. பாரம்பரிய கொங்கனி மொழி வேதாகமம் இருக்கிறது. சிலர் உருது அல்லது இந்தி மொழி பேசுகின்றனர். இம்மொழிகளில் வேதாகமங்களும், இயேசு திரைப்படமும் இருக்கிறது

துஆ செய்வோம்

•மீனவர்களின் கிராமங்களுக்குச் சென்று கொங்கனி மொழி பேசும் ஷேக் மக்களுக்கு இயேசுவை அறிவிப்பதற்கு இறைவன் வேலையாட்களை அனுப்பும்படி துஆ செய்வோம்.

•புதிய விசுவாசிகள் இறைவனுடைய கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளரவும், எதிர்ப்புகள் மத்தியிலும் தங்கள் விசுவாசத்தை தைரியமாய் அறிக்கையிடவும் துஆ செய்வோம்

•புதிய விசுவாசிகள் கொங்கனி ஷேக் சமுதாயங்களிடையே இருந்து புதிய விசுவாசிகளை உருவாக்க பயிற்றுவிக்கப்பட துஆ செய்வோம்

•ஏற்கனவே விசுவாசிகளாய் இருக்கின்ற பாரம்பரிய கிறிஸ்தவர்கள் இப்புதிய விசுவாசிகளை கிறிஸ்துவுக்குள் சகோதர சகோதரிகளாக ஏற்றுக்கொண்டு அவர்களிடம் அன்புக் கரம் நீட்ட துஆ செய்வோம் . 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *