எனது ஈமான்

 
அன்புள்ள சகோதரன் நூருல் அமீன் அவர்களுக்கு,

 

 
அஸ்ஸலாமு அலைக்கும்.
 
உங்கள் கடிதம் கண்டு மிகவும் சந்தோமடைந்தேன். நானும் என் குடும்பத்தாரும் சந்தோஷமா, அல்லாஹ்வின் ரஹ்மத்தோடு புதுவருடத்தை ஆரம்பித்தோம். உங்கள் சுகத்துக்காகவும் உங்கள் குடும்பத்தாரின் சுகத்துக்காகவும் அல்லாஹ்விடம் துஆ கேட்கிறேன்.
 
தாங்களின் பதில் கடிதத்தில் உங்கள் நம்பிக்கையை தெளிவாக எழுதியிருந்தீர்கள். எனக்காக உங்கள் நேரத்தை பயன்படுத்தியதற்காக நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். அத்தோடு சில கேள்விகளையும் கேட்டிருந்தீர்கள். அவற்றுக்கு பதில் எழுதுவதற்கு முன் என்னுடைய நம்பிக்கையைக்குறித்து உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன்.
ஆதம் நபி அவர்களும் அவ்வா (அலை) அவர்களும் அல்லாஹூ தஆலாவோடு மிகவும் நெருங்கிய உறவு வைத்திருந்தனர். அதனை தகப்பன் பிள்ளைகள் உறவோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். அல்லாஹ் அவர்களுக்கு முழு சுதந்திரத்தையும் கொடுத்திருந்ததோடு, ஒரு கட்டளையையும் போட்டிருந்தான். அதாவது தோட்டத்திலுள்ள சகல மரங்களின் கனிகளையும் புசிக்கலாம் ஆனால் தோட்டத்தின் நடுவிலுள்ள நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியை மாத்திரம் சாப்பிட வேண்டாம்.என்பதாகும். ஆதம் அவ்வா இருவரும் ஆடைகள் அணிந்திருக்க வில்லை. அது அவர்களுக்கு வெட்கமாக இருக்கவில்லை.
 
ஒரு நாள் ஷைத்தான் அவ்வா (அலை) அவர்களிடம் வந்து, இறைவன் இந்த தோட்டத்திலுள்ள எந்தவொரு மரத்தின் கனியையும் சாப்பிடவேண்டாம் என்று சொன்னாரா?”என்று கேட்டான். அதற்கு அவ்வா (அலை) அவர்கள் இல்லை இந்த ஒரு மரத்தின் கனியை மாத்திரம் சாப்பிடவோ தொடவோ வேண்டாம் என்றார்என்று பதிலளித்தார். அந்த மரத்தின் கனியை சாப்பிட்டால் நீங்களும் இறைவனைப்போன்று மாறிவிடுவீர்கள; என்று ஆசைக்ககாட்டினான் ஷைத்தான். அவனின் ஆசைவார்த்தைகளுக்கு ஏமார்ந்த அவ்வா (அலை) அவர்கள் தடைசெய்யப்பட்ட மரத்தின் கனியைச் சாப்பிட்டு தன் கணவருக்கும் கொடுத்தார்கள்.
 
அல்லாஹூ தஆலா அவர்களோடு உறவாட வந்தபோது, அவர்கள் இருவரும் ஒளிந்துக் கொண்டார்கள். ஆதம், நீ எங்கே இருக்கிறாய்என்று இறைவன் கேட்க, நாங்கள் ஆடையில்லாமல் இருக்கிறோம், உம்முடைய சந்நிதிக்கு வர முடியாமலிருக்கிறோம்என்று ஆதம் நபி பதிலளித்தார். நீங்கள் நிர்வாணமாயிருப்பதை எப்படி அறிந்துகொண்டீர்கள்என்று இறைவன் கேட்க, நடந்த எல்லாவற்றையும் இருவரும் இறைவனிடம் சொன்னார்கள்.
 
உலகத்தின் முதல் மனிதர்கள் இருவரும் இறைகட்டளையை மீறியது அவர்களுக்கும் முழு துன்யாவுக்கும் பாவமாக கருதப்பட்டது. இறைவனோடு மனிதனுக்கிருந்த உறவு உடைந்தது. அதன் பிறகு பிறக்கின்ற ஒவ்வொரு பிள்ளையும் பாவத்திலேயே பிறக்கின்றது. இறைவனோடு சரியான உறவு இருந்தபோது சந்தோமாகவும் நிம்மதியாகவும் இருந்த ஆதமின் குடும்பம், பிரச்சினைகளையும் துன்பங்களையும் சந்திக்க நேர்ந்தது.
 
·        நபி ஆதமின் பாவத்தை மன்னிக்க அல்லாஹ் ஒரு ஆட்டை குர்பான் கொடுத்தான்.
·        நபி இப்ராஹீமின் குடும்பத்துக்காக ஒரு ஆடு குர்பான் கொடுக்கப்பட்டது.
·        மூஸா நபியின் காலத்தில் ஒரு ஜாதிக்காக ஒரு குர்பான் கொடுக்கப்பட்டது.
·        முழு துன்யாவுக்கும் ……………………………………………………

 

 
இவ்வாறுதான் அல்லாஹ் காலத்துக்குக் காலம் ஒவ்வொரு நபிமார்களுக்கூடாக அவனின் பெரிதான இரக்கத்தை காட்டியுள்ளான். குர்பான் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை என்பது மனித சரித்திரத்தை சரியாக அறிந்த யாவருக்கும் புரியும். இன்று எம்மில் பலருக்கு குர்பான் (பலியிடுதல்) என்றால் என்னவென்றே தெரியாது. வெறுமனே மாட்டை அறுத்து சாப்பிடுவது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் குர்பான் என்பது பாவ நிவாரணப் பலியாகும்.
 
அல்லாஹ்வின் திட்டம் மனிதனின் பாவத்தை மன்னிப்பது மாத்திரமல்ல, உடைந்த உறவை மீண்டும் புதுப்பிப்பதாகும். அதாவது இறைவன் மனிதனை படைத்தது தன்னோடு உறவாடுவதற்காகவேயாகும். இதுவே உண்மையான தொழுகையாகும்.
 
·        ஒரு நபருக்கு ஒரு குர்பான்.
·        ஒரு குடும்பத்திற்கு ஒரு குர்பான்.
·        ஒரு சமுதாயத்திற்கு ஒரு குர்பான்.
·        கடைசியாக முழு உலகுக்கும் ஒரு குர்பான்.
 
அன்புள்ள சகேரதானே,

 

இந்த கடைசியும் முழு துன்யாவுக்குமான குர்பானை குறித்து அறிவிப்பதே என்மீது சுமத்தப்பட்ட கடமையாகவுள்ளது. அல்லாஹ் தனது வார்த்தையை (கலிமா) ரூஹுல் குத்தூஸ் மூலமாக மரியம் (அலை) கருவுற்று, பிறப்பித்தார். துன்யாவில் வாழும்போது இறை வார்த்தைக்கு இடப்பட்ட பேர் ஈஸா அல் மஸீஹ் என்பதாகும். பாவமறியா பரிசுத்தரான ஈஸா அல் மஸீஹ் முழு துன்யாவினதும் பாவதோம் நீங்க குர்பானானார்.
 
எவனொருவன் தன் பாவத்திற்காக ஈஸா அல் மஸீஹ் குர்பானானார் என்பதை ஈமான் கொள்கிறானோ அவன் வாழ்க்கையில் இறைவனோடுள்ள உறவு புதுபிக்கப்படுகிறது. அவன் நபி ஆதமைப் போன்று அல்லாஹ்வோடு கதைக்கும் பாக்கியத்தை பெறுகிறான்.
 
நான் சுருக்கமாக மேலே எனது ஈமானைக்குறித்து உங்களோடு பகிர்ந்துகொண்டேன். நீங்கள் சத்தியத்தைத்தேட வாஞ்சையுள்ளவர் என்பதை உங்கள் கடிதத்திறகூடாக அறிந்து கொண்டேன். தொடர்ந்தும் எனக்கு எழுதுங்கள். நான் உங்களை மறந்தாலும் உங்களை எப்பொழுதும் மறவாத வல்ல நாயன் அருள்புரிவானாக.   ஆமீன்
 
இப்படிக்கு
இறைநேசன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *