Monthly Archives: May 2016

யஹ்யா நபி சொன்ன ஷஹாதா

John 3-30

(யஹ்யா) யோவான் 3:22-36 


22 இவைகளுக்குப்பின்பு, ஈஸா அல் மஸீஹ்வும் அவருடைய சீஷரும் யூதேயா தேசத்திற்கு வந்தார்கள்; அங்கே அவர் அவர்களோடே சஞ்சரித்து, ஞானஸ்நானங் கொடுத்துவந்தார். 23 சாலிம் ஊருக்குச் சமீபமான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானங்கொடுத்துவந்தான்; ஜனங்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள். 24 அக்காலத்தில் யஹ்யா காவலில் வைக்கப்பட்டிருக்கவில்லை. 25 அப்பொழுது யோவானுடைய சீஷரில் சிலருக்கும் யூதருக்கும் சுத்திகரிப்பைக்குறித்து வாக்குவாதமுண்டாயிற்று. 26 அவர்கள் யோவானிடத்தில் வந்து: ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே; அவரைக் குறித்து நீரும் சாட்சிகொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானங்கொடுக்கிறார், எல்லாரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள். 27 யஹ்யா பிரதியுத்தரமாக: பரலோகத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான். 28 நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சிகள். 29 மணவாட்டியை உடையவனே மணவாளன்; மணவாளனுடைய தோழனோ, அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்கிறவனாய் மணவாளனுடைய சத்தத்தைக்குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்; இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமாயிற்று. 30 அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும். 31 உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்; பூமியிலிருந்துண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்; பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர். 32 தாம் கண்டதையும் கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார்; அவருடைய சாட்சியை ஒருவனும் ஏற்றுக்கொள்ளுகிறதில்லை. 33 அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தேவன் சத்தியமுள்ளவரென்று முத்திரைபோட்டு நிச்சயப்படுத்துகிறான். 34 தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்; தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார். 35 பிதாவானவர் குமாரனில் அன்பாயிருந்து எல்லாவற்றையும் அவர் கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார். 36 குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்.

பஸ்காப் பண்டிகைக்குப் பிறகு ஈஸா அல் மஸீஹ் எருசலேமைவிட்டுச் சென்று ஞானஸ்நானம் கொடுக்க ஆரம்பித்தார். மறுபிறப்புக்கு முன்பிருக்க வேண்டிய உடைந்த இருதயத்தைப் பற்றி சீஷர்கள் இப்போது அறிந்திருந்தார்கள். பாவ அறிக்கையில்லாமல் மீட்பு நடைபெறாது. ஞானஸ்நானத்தின் மூலமாக மனமுடைந்த பாவி இறைவனுடனான புதிய உடன்படிக்கைக்குள் நுழைவதற்கான தன்னுடைய ஏக்கத்தைத் தெரிவிக்கிறான் அதனால் பாவமன்னிப்புக்கென்ற ஞானஸ்நானம் உடைந்த இருதயத்தை அடையாளப்படுத்துகிறது.

யஹ்யா நபி தன்னுடைய ஊழிய இடத்தை யோர்தான் பள்ளத்தாக்கின் வடக்கு முனையிலிருந்த ஆயினோனுக்கு மாற்றி யிருந்தார். அவர்கள் யஹ்யா நபியிடம் வந்து தங்களுடைய இருதயத்தை ஊற்றினார்கள்; அவரும் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து, ஈஸா அல் மஸீஹ்வைச் சந்திப்பதற்கு அவர்களை ஆயத்தப்படுத்தினார்.